விதியின் வலை

June 24, 2009

விதியின் வலை

வானம் இருண்டது ,
மேகம் திரண்டது ,
இடியுடன் மின்னல்
மழையுடன் புயல்,
நூல் போல் இழை
சோ என்ற மழை

ஒரு அறையில் நான் தனிமையில் ,
பிரித்த ஒரு புத்தகம் என் கையில்,
திடீரென்றுஒரு பூச்சி என் தோளில்
படபடப்பு அதன் இறக்கையில்
மழையில் நனைந்த நேரம்
அதன் உடலும்  ஈரம்
என் கை அதைத் தட்டியது
சுவற்றின் மூலையில் விழுந்தது .
அதன் பக்கம் என் கவனம்
பூச்சி சாதித்தது மௌனம் .
ஒன்றிக்கவனித்தேன் அதனை
அழகு பட்டாம்பூச்சிதனை
சிருஷ்டியின் கைவண்ணம் என்ன?
அதில் கலந்த வண்ணம் தான் என்ன?
வானவில் போன்ற வண்ணங்கள்!
அதில்  தீட்டியக்கோலங்கள்.
அது பறக்காதா? என்ற ஏக்கம் .
கூடவே வந்தது துக்கம்
பிரார்த்தனையும் சேர்ந்தது
திடீரென்  அது பறந்தது .
ஒரே வியப்பு
ஒரே மலைப்பு
சுற்றிச்சுற்றிப் பறநதது
சுவற்றில் அது அமர்ந்தது .

நீளவிளக்கின் பின் ஒரு வலை
கண்டேன் முக்கோணத்தலை .
நம் பல்லிதான்
அதன் யமன் தான்
அதன் விதியை மாற்றினேன்
கம்பால் சுவற்றைத்  தட்டினேன்
ஓடி ஒளிந்தது
பூச்சியும் பறந்தது
என் முகத்தில் வெற்றிப்புன்னகை
விதியை வென்று  சூடிய வாகை
”டிக்” என்ற ஒரு ஒலி கேட்டேன்
கீழே விழுந்தப் பூச்சியும் கண்டேன்
அதன் இறக்கைகள் என் மேல்
வண்ணக்கலவைகள் என் மேல்
சுழலும் விசிறி அதன் யமனானான்
தன் கடமைச்செய்த தருமனானான்

வண்ணாத்திப்பூச்சியின் உடல்
சுவரோரம் கிடைந்தது
விதி வென்று அங்கு சிரித்தது

Advertisements

தலையைத் தாங்கிய மாருதி 5

June 23, 2009

” உங்கள் பெண்ணின் சாதனையைப்பற்றிக் கேட்டு அவரைப்பார்க்க
மிக ஆவலாக உள்ளேன் ”என்று கூறிக்கொண்டே ராதாகிருஷ்ணகோயிலின் அதிபர்
பத்மாஜியின் வீட்டினுள்ளே நுழைந்தார்
”ஆயியே பதாரியே என்று அவரை அன்புடன் அழைத்து தன் பெண் இருக்குமிடம்
அழைத்துச்சென்றார் தந்தை ,உள்ளே பார்க்க அவர் கண்களில் நீர் பெருகியது
,பின் அவரது ஆகாரம் பற்றியும் பின் பசுவைப்பற்றியும் தந்தைத் தெரிவிக்க
கோயில் தலைவர் மிகவும்
மகிழ்ந்து  ” ஆஹா என்ன பாக்கியம் நானே ஒரு பசு வாங்கிக்கட்ட நினைத்தேன்
,கிருஷ்ணன் அருகில் பசு இருந்தால் நல்லதுதானே அவனே கோபாலன் ஆயிற்றே !
அந்தக்கண்ணனே இங்கு என்னை வரவழைத்தனோ என்று தோன்றுகிறது”.

ஆமாம் என் மகளின் ராமநாமம் உங்களை இங்கு வரவழைதிருக்கிறது அந்தப்பசுவை
நீங்கள் அழைத்துச்செல்லுங்கள்
ஆனால் ரிஷிகேசத்திலிருக்கும் ஆஸ்ரமத்தின் சாது மஹராஜுக்குத்
தெரியப்படுத்த வேண்டும் என தோன்றுகிறது ,”
;” ஆம் சரிதான் நான் ஒன்று சொல்ல மறந்தேன்  இந்த ராதாகிருஷ்ணக்கோயிலும்
அந்த ஆஸ்ரமத்திற்குத் சொந்தமானது தான் . நான் இதைக்கட்டினேனே தவிர அதை
இந்த ஆஸ்ரமத்திற்கு
அளித்து விட்டேன் ஏனென்றால் எனக்குப்பிறகு யார்
இதைப்பார்த்த்க்கொள்வார்கள் என்று தெரியவில்லை ;”

”எல்லாம் அந்தக்குருவின் அருள்தான் நீங்கள் பசுவைக்கன்றுடன்
அழைத்துப்போங்கள்.ரொம்ப மகிழ்ச்சி ”/

பசுவும் கோயிலுக்குப்போய் வேணுகாபாலன் அருகில் ஜம்மென்று
அமர்ந்துவிட்டது பலர் கோமாதா பூஜையும் செய்ய ஆரம்பித்தனர் .எல்லாம்
சுபமாக முடிந்தது
ஆனால் என் மகனுக்குப்பெரிய வேலைக்கிடைத்ததால் இன்னும் நல்ல சௌகரியமான
வீட்டிற்குப்போக ஆசைப்பட்டான் .அந்த
இடத்திலேயே 25 வருடங்கள் இருந்துவிட்டு எனக்கு அந்த இடத்தை
விட்டுப்போக விருப்பமேஇல்லை என் பதமாஜி அங்கு இருக்கிறாரே!
ஆனால் பிள்ளைப்பாசம் அவன் சந்தோஷம் தான் என்  சந்தோஷம் என்று நினைத்ததால்
 அவன் மாற்றிய வீட்டிற்குப் போனோம் அதுவோ ஜமுனாபார் என்ற இடத்தில்
கிழக்கு தில்லியில் இருந்தது ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக
அந்தப்பத்மாஜியிடமிருந்து தூர விலகிப்போய்விட்டேன் .மனம் சொல்லமுடியாத
வருத்தம் தான் .ஆனால் என் அக்கா மூலம் விசாரித்துக்கொண்டு இருப்பேன்
பத்மாஜியின் அண்ணாவிற்குத் திருமணம் நடந்தப்பின் இடவசதி இல்லாததால் அவர்
ரிஷிகேஷ்
போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது.
ஒருதடவை ரிஷிகேஷ் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது
அங்கு இருந்த ஒருநாளில் அவர் பெயரைச்சொல்லி விசாரித்தேன்
ஆனால் அவர் பெயரை மாற்றிக்கொண்டாரோ  என்னமோ !
அவர் பெயரைச்சொன்னால் ஒருவருக்கும் தெரியவில்லை ,
ஆனால் அவர் என் நினைவில் தினமும் இருக்கிறார்.
அவரால் தான் நான் நாமஸ்மரணையின் மஹத்துவம் புரிந்துக்கொண்டேன் இந்த
நாமஸ்மரணைக்கு காலம் நேரம் இல்லை. சமையல் செய்யும் போதும் சொல்லலாம்
நடக்க்கும் போதும் சொல்லலாம் .மற்ற வேலைச்செய்யும் போதும் சொல்லலாம்.
அவரை எப்போதாவது பார்க்கும் சந்தர்ப்பம் வர
அந்த இறைவன் அருளை வேண்டுகிறேன்
அன்புடன் விசாலம்

முற்றும்


தலையைத் தாங்கிய மாருதி 4

June 23, 2009

> வீட்டிற்கு வந்த பத்மாஜியின் தந்தை மனம் கலங்கி நின்றார்.
> ”இப்போது நான்  அவள் முகத்தையாவது பார்க்கிறேன் பின்னால அந்தச்சாது
> மஹராஜ்சொன்னது போல் அவள் வீட்டை விட்டுப்  ஆஸ்ரமத்திற்குப் போய் விட்டால்
> என்ன செய்வது ?ஆனலும் இந்த  மாதிரி ஆன்மீகத்தில் மேலும் பல சாதனைகள்
> செய்து என் பெண் உயர்ந்த இடத்தைப்பிடிக்கப்போகிறாள் .அவள் எங்களுக்குப்
> பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் அல்லவோ!  எல்லாம் அவன் சித்தம்  ”
> இப்படி நினைத்து  ஆறுதல் அடைந்தார்
>
> அந்தப்ப்சுவும் கன்றும் அவர்கள் வீட்டுப்பின் பக்க சந்தில் கட்டப்பட்டன
> .பால் கறந்துக்கொடுக்க ஒருவர் நியமிக்கப்பட்டார் ,
> ஒரு வாரம் கழிந்தது ,அவர்கள் வீட்டு மறுபக்கம் ஜமேதார்னி இருக்கும் காலனி
> ,ஜமேதார்னிகள் பல வீட்டுக்கக்கூஸை கழுவி
> சுத்தம் செய்து வருவார்கள்,அந்த இடத்தில் கசாப்புக்கடைகளும்
> இருந்தன அந்தக்காலனியின் சிறுவர்களுக்குப் படிப்பு வராமல்
> ரோட்டில் திரிந்து கோலி விளையாட்டு கில்லி டண்டா விளையாட்டு  பட்டம்
> விடுதல் என்று சமயத்தைக்கழிப்பார்கள்
> அவர்கள் கண்ணில் இந்தப்பசுவும் பட்டுவிட்டது ஆரம்பித்தது சேஷ்டை
> ,,,,,,,ஒருவன் வாலை முறுக்கினான் ஒருவன் கொம்பைப்பிடித்தான் .மேலும்
> சிலர் அருகில் வராமல் கற்களை வீசினர் ,
>
> ஆனால் பல கோமாதா பிரியர்கள் அதற்கு அகத்திக்கீரை ப்ழங்கள்
> எல்லாம் கொடுத்து  பூஜையும் செய்தனர் ,இந்தச்சிறுவர்கள் தொந்தரவைப் பற்றி
> புகார் கொடுத்தால் போதும் அந்தச்சாதி சனம் எல்லோரும் ஒன்று கூடி  ரகளைச்
> செய்து விடுவார்கள்.
> கன்னாப்பின்னாவென்று சொற்கள் பச்சை பச்சையாக வரும் .
> தந்தை இதனால் மனம் வருந்தி தன் மகளிடம் சொல்ல அவளது
> பூஜை அறைக்குச் சென்றார்பதமாஜி தியானத்தில் இருந்தாள்.
> சிறிது நேரம் கழித்து  தந்தை  தொண்டையைக் கனைத்தார் ,பத்மாஜி கண்கள்
> திறந்துப்பார்த்தார் ,
> அப்பா என்ன கவலையாக இருக்கிறீர்கள்?
> தந்தை எல்லாவற்றையும் விவரித்து பசுவை எப்படிக் காப்பாற்றுவது என்று
> தெரியவில்லை என்றார் ,
> ” அப்பா கவலையை விடுங்கள்,என் ராமநாமம்  அதையும் காப்பாற்றும் ”
> என்றார் பெற்றோர்களின்  மனம் நிம்மதி அடைந்தது .
> அவர்கள் வீட்டு அருகில் ஒரு கிருஷணன் கோயில் ,,,,,,
> சிறு கோயிலானாலும் மிக அழகு ,ராதா புன்னகைப்புரிய  கண்ணன் வேணு வாசிக்க
> அந்தச்சன்னிதானமே பவித்ரமாக விளங்கும்,அதுவும் பளிங்குச்சிலைகளாக
> வடிக்கப்பட்டிருந்ததால் அதில் ஒரு பளபளப்பும் மின்னும் ,மக்கள் அங்கு
> வந்துகண்ணனின் பாதங்களை அலம்பி  துளசி மாலை பூக்கள் போட்டு பாதங்களைத்
> தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள்   அங்கு அகண்ட பஜனையும் நடக்கும்
> அவர்கள் செய்யும் பஜனையில் சிரத்தை இருக்கும் பக்தி இருக்கும் சிலர்
> கண்ணனுடன் நடனம் ஆடவும் தொடங்குவார்கள் மனம் ஒன்றி விடும் நிலைதான் ,,,,
> அந்த ராதாகிருஷ்ணன் கோயிலை நடத்துபவர் பத்மாஜியைப்பற்றிக்
> கேள்விப்பட்டு அவரைப்பார்க்கவும் தீர்மானித்தார்
>
>


தலையைத் தாங்கிப்பிடித்த மாருதி 3

June 23, 2009

>>  அந்தசாது சொன்னபடி  அவருக்கு பசும்பால் தினமும் வந்துக்கொண்டிருந்தது
>> ,ஆனால் சில சம்யங்களில் எதாவது
>> கடைஅடைப்புகள் அல்லது காடி ரோக்கோ {ghaadhi rokko}என்று தில்லியில்
>> கலவரம் வரும் நேரத்தில் இந்தச்செயல் கொஞ்சம்
>> தடைப்பட்டது  பார்த்தார் ரிஷிகேசத்தில் இருந்த சித்தர் ,,அவசரமாக
>> நல்ல பசுவும் அதன் கன்றுக்குட்டியையும் வாங்கி  அந்தப்பெண்
>> இருந்த இடத்திற்கு அனுப்பியும் வைத்தார் ,
>> ஒரு நாள் வெள்ளிக்கிழமை ரகர்புராவில் அவர் வீட்டு வாசலில்
>> பசுவுடன் அதன் குட்டியும் நின்றது கூட வந்த் ஒருவர் அவை
>> ஆஸ்ரமத்திலிருந்து வந்தது எனவும் அந்தச்சாது மஹராஜ் அனுப்பி இருக்கிறார்
>> என்றும் கூறினார்
>> பத்மாஜியின் அப்பா ” ராமா இது என்ன விளையாட்டு நான் எப்படி
>> இதைப்பராமரிப்பேன் வீடு ஒட்டவே பணம் போதவில்லை பையன்
>> படிப்பு சிலவு பார்ப்பேனா  இன்னொரு பெண்ணின் கல்விக்கு
>> சிலவு செய்வேனா கோமாதாவை ரட்சிக்க நிறைய சிலவாகுமே ”
>> என்றெல்லாம் கலங்கினார் ஆனால் வந்தவரோ அவர் எண்ணத்தைப்
>> புரிந்தாற்போல்  ”ஐயா  இதைப்பராமரிக்கும் சிலவு எல்லாம் எங்கள்
>> ஆஸ்ரமம் கொடுத்து விடும் கவலைப்படாதீர்கள்”என்றார்
>> யார் அந்த குருஜி நம் பெண்ணிற்கு இத்தனை உதவுகிறார்,
>> அவருக்கு ஏன் நம் பெண்ணின் மேல் இத்தனைப்பாசம்  ”என்று குழம்பிப்போய்
>> அந்தத் தந்தை இதை விசாரிக்க ரிஷிகேஷ் கிளம்பினார்
>> ஹரித்துவாரில் ஹர்கி பைரி என்னும் இடத்தில் கங்கை ஓடுவதை நமஸ்கரித்து
>> ஆர்த்தி காட்டிவிட்டு ரிஷிகேஷை அடைந்தார்
>> அங்கு இந்த ஆஸ்ரம முகவரியைத் தேடி அந்த இடத்தையும்
>> அடைந்தார் ,அந்தச்சாது மஹராஜ் அவரை இன்முகத்துடன்
>> வரவேற்று ரொட்டி தாலுடன் பழங்களும் கொடுத்து உபசரித்தார் பின் சொன்னார்
>> ”நீங்கள் வந்தக்காரணமும் கேடகப்போகும் கேள்வியும் எனக்குத்
>> தெரியும்,உங்கள் பெண் போன ஜன்மத்தில் என் தாயாக இருந்தவர்
>> இந்தச்சன்மத்தில் அவர் ஆன்மீகத்தில்
>> ஒரு பெரிய சாதனையாளராக வரப்போகிறவர் இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்த
>> ஆஸ்ரமத்திற்கே வந்துவிடுவார்
>> குடும்பபந்தத்தில் அவர் சிக்காமல் சன்யாசினி போல் வாழும் வாழ்வுக்கு அவர்
>> மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறார்”
>>
>> தந்தைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தன் வீட்டில்
>> அவள் முகமாவது பார்ப்போம் அவள் முழுவதும் விட்டு இங்கு வந்து விட்டால் ?
>> அந்தத் தாயும் இதை எப்படித் தாங்குவாள்?
>> என்று பல யோசனையில் ஈசவரோ ரக்ஷது என்று நினைத்து ..திருமப வந்துச்சேர்ந்தார்


தலையைத் தாங்கிப்பிடித்த மாருதி

June 23, 2009

>>> நான் அந்தபெண்ணின் விட்டிற்கு அடிக்கடி போய் வருவேன் .அந்தப்பெண்ணின்
>>> பெயர் பத்மா  அவளது அண்ணாவின் பெயர் திரு வைத்தியநாதன்  அவர் அப்பா ஒரு
>>> சிறந்த ராமபக்தர் அவரது வீட்டில் சுந்தரகாண்டம்  தினமும்   படிப்பார்
>>> ,என் அக்கா நீலா அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர், அவர்
>>> தினமும்  அவரது வீடு போய் அந்தப்பத்மாவைப்பார்த்து வருவது வழக்கம் , நான்
>>> ஒருநாள் அவரது வீடு போயிருந்தேன் .”மாமி  பத்மா இப்படியே
>>> உட்க்கார்ந்திருக்கிறாளே பசி தாகம் இருக்காதா?என்ன சாப்பிடுகிறாள்,உடம்பு
>>>  வீக்காக போய்விடுமே ”என்றேன்
>>> ”அவள் காலையில் கொஞ்சம் பொங்கல் பிரசாதமும்  மாலையில் பாலும் பழமும்
>>> பிரசாதமாக எடுத்துக்கொள்கிறாள்” என்றார்
>>>
>>> அப்பப்பா  இந்தச்சின்ன வயதில் ஐம்புலன்களையும் கட்டி வைராக்கியத்துடன்
>>> இப்படி தியானத்தில் அமருவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்தான்
>>> ,,,,,”அவள்”  என்று கூறிய நான் அந்தப்பெண்ணை மரியாதயாக
>>> ‘அவர்’ என்று மாற்றிக்கொண்டேன் ,அவர் கண்களைப் பார்க்க
>>> ஒரே தேஜஸ் ,,பார்த்தாலே  ஏதோ இமாலய்த்தில் பல்லாண்டுகள்
>>> தவம் இருந்த சக்தி கண்களில் தெரிந்தது  சிலரது கண்களைப்பார்த்தாலே
>>> தெரிந்துவிடும்  தியானத்தில் ஊறி  வெற்றிபெற்றுவருபவர்கள் என்று
>>> ,,,,,சிலரது கண்கள் தியானத்தில் இருந்தாலும் மாந்திரீகம்
>>> போன்றச்செயலில்   ஈடுப்பட்டிருந்தால்
>>> அந்தக்கண்களின்  ஒளியும் வேறுவிதமாக இருக்கும் நேருக்கு நேர்
>>> பார்க்க முடியாமல் எதோ தடுக்கும்
>>> இந்தப்பத்மாவைப்பார்க்க   மனமெல்லாம் பரவசம் அடையும்
>>>
>>> ஒரு நாள்,,ரிஷிகேசத்திலிருந்து ஒரு சாது  திடீரென்று எழுந்தார்
>>> அவர் ஒரு சித்தர் எனலாம்  அவர்து சிஷ்யரை அழைத்து
>>> ”நீ நேராக தில்லி போ அங்கு ரகர்புராவில் இருக்கும் இந்த முகவரியில்
>>> சென்று  இந்தப்பசுமபாலைக்கொடுத்துவிட்டு வா,
>>>
>>> நாளையிலிருந்து இங்கிருந்து  பசும்பால் தினமும்  காலை அங்கு சென்று
>>> கொடுக்க ஏற்பாடு செய்துவிடு ”என்றார்
>>> பத்மாவின் வீடு ,,,,,,,காலை 6 மணி ,,,ஒரு தாடி வைத்த மனிதர்
>>> கதவைத் தட்டினார் அந்த அம்மாவும் கதவைத் திறந்தார் ,
>>> பால் நிரம்பியச்செப்பு சொம்பை நீட்டி இங்கு தியானம் இருக்கும்
>>> பெண்ணிற்கு இந்தப்பசும் பாலைக் கொடுங்கள் இனிமேல் எருமைப்பால் தரவேண்டாம்
>>> ”என்றார் ,அந்த அம்மாவும்  அதை வாங்கிக்கொண்டார் பின்னர் விவரம்
>>> கேட்டதில் ரிஷிகேசத்திலிருந்து
>>> வந்தது என்றும் தினமும் இதைபோல் அந்த ஆஸ்ரமத்திலிருந்து வரும்
>>> என்றார்,,,,,,,,,
>>>
>>> தொடரும்


தலையைத் தாங்கிப்பிடித்த மாருதி 1

June 23, 2009

நான் தில்லியில் படிப்பித்த DTEA  பள்ளியில் ஒரு சிறு பெண் வந்து
>>>> சேர்ந்தாள் ,ஆனால் அவளுக்கு படிப்பில் நாட்டம் இல்லை எப்போதும் கண் மூடி
>>>> அமர்ந்து விடுவாள், அவள் வாய் ராமநாமாவை விடாமல் முணுமுணுக்கும் ,அவள்
>>>> வீடு எங்கள்
>>>> வீட்டிலிருந்து நடந்துப்போகும் தூரம்தான் ,படிப்பில் ஒரு 50%
>>>> வாங்கிவிடுவாள் , அவள் ஐந்தாவது வகுப்பு வந்ததும் அவள் தாயிடம் தான்
>>>> பள்ளிக்குப்போக விருப்பமில்லை என்றிருக்கிறாள்
>>>> அவள் தாய் காரணம் கேட்டவுடன் தனக்கு ராமநாம ஜபம் செய்ய நேரம்
>>>> கிடைப்பதில்லை தான் வீட்டில் இருந்தால் ஜபிக்க்கத்தடை
>>>> இருக்காது  என்றாள். சில ஆசிரியர்கள் நண்பர்கள் கல்வியின் முக்கியத்துவம்
>>>> பற்றிச்சொல்லியும் அவள் மனம் ராமநாமத்திலேதான்  லயித்தது ,அவள் பள்ளி
>>>> வாராமல் நின்றுவிட்டாள் பின் அவள் வீட்டில் சாப்பிடும் நேரம் தவிர கண்கள்
>>>> மூடியபடியே ராமநாமம்  சொல்லிக்கொண்டே இருப்பாள்,
>>>> அவள் பெற்றோரும் அவள் ஏதோ ஒரு பெரிய லட்சியத்திற்காகப்பிறந்தவள் என்று
>>>> அவள் போக்கிற்கு விட்டுவிட்டனர்.தன் 12 வயது ஆரம்பத்திலேயே
>>>> பூப்பெய்தினாள்.
>>>> அது அவளுக்கு மிகவும் இடைஞ்சல் தந்ததால்   அவள்  ஹனுமார் படத்தின் முன்
>>>> மனமுருகி  இதை நிறுத்துமபடி வேண்டினாள் ,  என்ன ஆச்சரியம்  ஒரு 6 மாதம்
>>>> கழிநதப்பின்
>>>> அவளின் மாதத்தொல்லை நின்றுவிட்டது .
>>>> ஒரு வருடம் சென்றது  அவள் கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப
>>>> பந்தத்திலிருந்து  கழண்டுக்கொண்டாள்,அவள் இருந்த வீடு சின்னவீடுதான்
>>>> ,அதில் எல்லோருடையக்குரல் டிவி சத்தம்  என்று கேடபது தடையாக இருந்ததால்
>>>> தனக்கென்று ஒரு தடுப்பு அறை
>>>> போட்டுத்தரும்படி அவள் அப்பவைக்கேட்டுக்கொண்டாள்
>>>> அவரும் தன்  மகளுக்காக partition தடுப்புஅறைக்கட்டிக்கொடுத்தார்  கதவு
>>>> வைக்க முடியாமல் ஒரு திரைச்சீலையைக்கட்டிகொடுததார்
>>>> ஆயிற்று ஒரு அழகிய பூஜை அறை அதில் பழையகால ராமர் பட்டாபிஷேகம்  படமும்
>>>> தனியாக மாருதியின் சின்னச்சிலையும்  வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன
>>>> ,தினமும்  இரு வேளையும் பிரசாதமும் வைக்கப்பட்டன் பிரசாதம் கல்கண்டு
>>>> பேரிச்சம்பழம் அல்லது திராட்சைப்போன்றது தான் ,அவளப்பொருத்தவரை பூஜை
>>>> எல்லாம் ராம நாமம் சொல்வதுதான் ,,.
>>>> ஒரு நாள் தன்  பெற்றோரிடம்  தான் மூன்று நாடகள் விடாமல்
>>>> தியானத்தில் இருக்கப்போவதாகவும் தன்னை எதற்கும் கூப்ப்பிடாமல்
>>>> இருக்கும்படிக்கேட்டுக் கொண்டாள்..
>>>> அவள் தாய்க்கு மனம் பதறியது இந்தச்சின்ன வயதில் இப்படி ஒரு
>>>> சாதகமா ? பசிக்காதா? வயது 13 தானே ஆகிறது  என்று மனம்
>>>> கலங்கியது ,அவள் அப்பாவோ  எல்லாம் ராமர் பார்த்துக்கொள்வார் என்று
>>>> மனைவியைச்சமாதானப்படுத்தினார்
>>>> ஒருநாள் ஓடியது  பின் இரண்டாவது நாளும் முடிந்தது மூன்றாவது
>>>> நாளில்  தன் மகள் என்ன செய்கிறாளோ என்ற கவலையில் அவள்
>>>> தந்தை  திரைச்சீலையை சற்று ஒதுக்கிப்பார்த்தார் ,ஆஹா அங்கு அவர் கண்ட
>>>> காட்சி ,,,,அவள் மகள் மயங்கி தலைச்சாய்ந்து இருக்க
>>>> அங்கு ஹனுமன் அவள் தலையைத் தன் இரு கைகளால் தாங்கி கீழே விழாதபடி
>>>> பிடித்துக்கொண்டிருந்தார் ,அவருக்கு இந்தக்காட்சியைக்கண்டு மயக்கமே
>>>> வந்துவிட்டது .என்ன பாக்கியம் !
>>>> என் பெண்ணிற்கு இப்படி ஒரு பாக்கியமா? நான் அவளைப்பெற
>>>> என்ன புண்ணியம் செய்தேனோ என்று பெருமையடைந்தார்
>>>> அவளைப்பார்க்க நானும் போயிருந்தேன் ,மெய் மறந்து அவள்
>>>> அமர்ந்தவிதம் அவள் சாதாரண்மானப்பெண்ணல்ல போன் ஜன்மத்தில் பெரிய ரிஷியாக
>>>> இருக்கலாம் என்று தோன்றியது
>>>> தொடரும் ………
>>>> அன்புடன் விசாலம்
>>>>


இரு படகுகள்

June 23, 2009

நம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்,
வாழ்க்கை என்ற  படகைக்கண்டேன் ,
மனம் என்ற பாய்மரம் கண்டேன் ,
கடவுள் அன்பு காற்றாய்க்கண்டேன்
கருணைத் தென்றல் அங்கு வீசக்கண்டேன்
மனம் அங்கு விரியக்கண்டேன் ,
அன்பெனும் துடுப்பைச்செலுத்தக்கண்டேன் ,
தெய்வபலம் அங்குப் புகுவதைக்கண்டேன்,
சோதனையில் சாதனை பெருகக்கண்டேன்
எதிர்நீச்சலில் மன உறுதி வலுக்கக்கண்டேன்
வாழ்க்கைக்கடலின் இன்பம் உணரக்கண்டேன்
இயற்கையில் தெய்வதரிசனம் அங்கு கண்டேன்

இரண்டாவது படகு ,,,,,,

அவநம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்
வாழ்க்கைப்படகு அங்கு மிதக்கக் கண்டேன்
மனம் என்ற பாய்மரம் இறுகக்கண்டேன்
வெறுப்பு என்ற துடுப்பு செலுத்தக்கண்டேன்
பேராசை,பொறாமை அலைகள் வீசக்கண்டேன்
குறுகிய மனத்தில் புயல் வீசக்கண்டேன்
சூராவளி ஒன்று அங்கு அடிக்கக்கண்டேன் ,
வாழ்க்கைப்படகு தத்தளிப்பதைக்கண்டேன்
மன உறுதி அங்கு துவளக் கண்டேன்
மனச்சாட்சி அங்கு மடியக்கண்டேன்
இறைச்சக்தி அங்கு மறையக்கண்டேன்
ஒளி அடங்கி மன இருளில் ஒடுங்கக் கண்டேன்
வாழ்க்கைப்படகில் அங்கு துன்பத்தைக்கண்டேன்