பூரி தேரோட்டம்

பூரி ஜகன்னாத் என்றாலே மறக்க முடியாத விமரிசையானத் தேரோட்டம் தான் எல்லோருக்கும்  ஞாபகம்  வரும் .எல்லா ஆலயங்களிலும் ஒரு அர்த்தச்செறிவோடு திருவிழாக்கள்  நடத்துகிறார்கள்..தெப்பம்  ராம்லீலா ,சூரசம்ஹாரம்  போன்ற் திருவிழாககள்
மக்கள் மனதில்  ஒரு  விதமான பக்தி பாவமும்  ஒரு   ஆன்மீக  உணர்வும்  தோன்றி பரவசப்
படுத்துகின்றன .இந்தத் திருவிழாக்களில் முக்கிய அம்சமாக விளங்குவது  தேரோட்டம் .
அது அசைந்து அசைந்து  ஆடி ஆடி வரும் அழகே அழகு . “தேர்ப் போல் அசைந்து வருகிறாயே”
என்று  மெள்ள நடந்து வருபவர்களைச்  சொல்வதுண்டு. அந்தச்  தேரின் சக்கரமே  மிகப்
பெரியதாக இருக்கும் .,அந்தத் தேரை மிகப் பருமனான தாம்புக் கயிற்றால்  இழுக்க,  இழுக்க அது மேலே  நகரும்.  இறைவன்   தன் இறைவியுடன்  தன் வாகனத்தில்  பல அலங்காரங்களுடன், ஆபூஷணங்களுடன் பூமாலைகள் மணமணக்க கோவிலிலிருந்து  கிளமபி 
.நாற்புற  வீதிகளில்  வரும்  அழகே அழகு. .அதைக் காண கண் கோடி  வேண்டும் , அதற்கு பாக்கியம் செய்திருக்கவும்  வேண்டும ..நம்மையும்  அறியாமல் ஒரு ஆனநதம்    ஏற்படுகிறது. தவிர   ஆயிரக்கணக்கான  கைகள் வடம் பிடித்து  இழுக்கின்றன .கைகளிலிலும்
எத்தனை விதமான  கைகள்.சாதி பேதமில்லாமல்   ஒரே பக்தி உணர்வுடன் இழுக்கின்றன.
எல்லோர்  வாயிலும்  ஒரே நாம ஸமரணைதான் .சிவனோ ,முருகனோ  அம்பாளோ  கோவிந்தனோ  யார் இருந்தால்  என்ன ?அந்த நேரத்தில் எல்லோர் மனமும் 
ஒரே நோக்கோடு ,ஒரே எண்ண்த்தோடு  செயல்பட்டு  அந்தப் பிரும்மாண்டத் தேரை இழுக்க
முயலுகின்ற்ன .இதுவும் ஒரு தியானம் தான் 
 
தேரோட்டத்தில் தான் எத்தனைப் பலன்கள்  உயர்வு தாழ்வு போன்ற  எண்ணம் இல்லை . அந்தக் காரியத்தைச் சிறந்த முறையில் முடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் ,அதனால் 
மனதை ஒருமைப் படுத்தும் சக்தி ,,எல்லோரும் ஒன்றே   என்ற உணர்வு ,ஏழை,பண்க்காரர்
என்ற பேதமில்லாத  நிலை , இப்படி   பல நற்சிந்த்னைகள் உண்டாகின்றன ,மக்கள் கூடினால்
வலிமை  மிகும் .இதில் எல்லோரும் பங்கு  பெற  தேசிய ஒருமைப்பாடு  ஏற்படுகிறது ,
“கூடி வாழ்ந்தால் கோடி நனமை  “என்பது போல் மக்கள் கூடி ஒரே எண்ணத்துடன் மன
வலிமைப் பெற்றால்  எதையும் சாதிக்க இயலும்  என்றும் தெரிகிறது .ஒருவர்க்கொருவர்
அன்பும், பாசமும்   கூடுகிறது தேர் என்றாலே பல வேலை வாய்ப்பு கிடைக்கும் ,தேரைச்
செப்பனிட  ,புதுப்பிக்க,பல விதமான பொம்மைகள் அமைக்க .சிலைகள் செய்ய .வண்ணத்
துணிகள்,.கொடிகள்,செய்ய ,என்று பல பேர்கள் சிறுதொழில்களில்  ஈடுபடுகின்றனர் .
சிலர்  ரோட்டில் கடைகள்   வைத்து  தன்  குடும்பதைக் காப்பாற்றுகின்றனர்..இதைப் பார்க்க பலநாட்டு
மக்கள் வருவதால் நம் பாரத கலாச்சாரம் பரவுகிறது .தவிர  அந்த இடத்திற்கு  மந்திரிகளும்
முக்கியப் பிரமுகர்களும்  வர இருப்பதால்  பல இடங்கள் சுத்தப்படுத்தப் படுகின்றன .
எப்போதுமே  சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணர்வு  தோன்ற வேண்டும்   இந்தத் தேர் திருவிழா மூலம் சுகாதார இலாகா  சற்று விழித்துக் கொண்டு    வேலைச்  செய்ய 
முன் வருகின்றன்ர் ,மக்களின் விழிப்புணர்ச்சியும்  இதில் மிகவும் தேவை .வாழைப் பழத்
தோலை அந்த இடத்திலேயே போட்டால்  அவர்களுக்கேதான்  ஆபத்து,
 
தேர்த்திருவிழா என்றால்   திருவாரூர்த்தேரும்  ,பூரி ஜ்க்ன்னாத் தேரும்  நம் கண்முன்னால் உடனே வரும் , ஜூலை மாதம் வரும்  அமாவாசைக்கு இரண்டு நாள் கழித்து பிரம்மாண்டமான
தேரோட்டம் பூரியில்  நடைப் பெறும் . ஜன சமுத்திரம்  என்றால் மிகையாகாது..ஒரு பத்து 
நாட்கள் முன்பே கல்யாணக்கோலம்  கொள்ளும் .எங்கும் பிரகாசமான விள்க்குகள். முக்கிய 
வீதிகளில் கலர் விளக்குகள்   அணைந்து அணைந்து எரியும் விளக்குகள்.  வண்ண வண்ண
விளக்குகள்  கண் சிமிட்டும்   விளக்குகள் என்று  நம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் ,
வீதியின் இரு புறமும்  பலவிதமானக் கடைகள்  செப்புப் பாத்திரங்கள்,கற்சிலைகள்
  பொம்மைகள்  பூஜைக்கு வேண்டிய  சாமானகள்  வளைகள் ,,மணிகள்.  ஸ்வாமி படங்கள்
என்று எது கேட்டாலும்  கிடைக்கும் .இரவு ப்கல் என்றே தெரியாமல் அந்த இடம்  சுறுசுறுப்பாகிறது
 
மூன்று தேர்கள் அலங்காரத்துடன் தயாராக நிற்கின்றன.
அருள்மிகு ஜகன்நாதர் .அருள்மிகு பலராமர் .அருளைப்
பொழியும் சுபத்திராதேவி   அதில்  பவனி வர ஏற்பாடுகள்
நடக்கின்றன .ஜே ஜே என்று சுமார் பத்து லட்சம் பேர்கள்
கூடுகின்றனர் ,தேர் வரும் வீதிகள் தண்ணீரால்  அல்ம்பப்
படுகின்றன எல்லா  ஹோட்டல்களிலும்  தங்க வசதிகள்
தவிர சத்திரத்திலும்  இலவச  அறைகள் தயாராகின்றன ,
வாத்திய கோஷ்டிகள்   நகராக்கள்   தாரைத் தம்பட்டங்கள்
துந்துபிகள் முழக்கத்துடன்  விழா தொடங்குகிறது இந்த விழாவிற்கு சில  முக்கியப் பிரமுகர்களும் வருகைத் 
தருகிறார்கள் .இந்த  ஆலயத்தில்  கற்சிலைகள் இல்லை 
மரத்தால் ஆன   முழுமைப் பெறாத   பொம்மைகள் தான்
உள்ளன . பகவான் ஜகன்நாதர்  பலராமர்  சுபத்திரா மூவருமே
மரத்தால்  ஆனவர்தான்.இங்கு   சாதி  மத பேதமில்லை ,உள்ளே
யார் வேண்டுமானாலும் போகலாம் .ஒருவிதமானக் 
கட்டுப்பாடும் இல்லை .எல்லோருக்கும் சமமாக  பிரசாதம் 
கிடைக்கிறது .பிரசாதம்  செய்பவரே தாழ்ந்த சாதியினர்தான்
என்கிறார்கள்.முதலில்  பல பிரதம் பூசாரிகள் வருகின்றனர் 
பின் அந்த அரச்க் குடும்பத்தினரின் மூத்தத்தலைவர் 
பஞ்சக்கச்சத்துடன்  ,தலைப்பாகையுடன் தேரின் உள்ளே நுழைந்து ஒரு துடைப்பத்தால் கூட்ட  பின்னால் 
புனித நீரும் தெளிக்கப்பட்டு  சுத்தமடைகிறது.,பின்  
பகவான் ஜகன்நாதர் வருகிறார் ,அவரைக் கொஞ்சம்
கொஞ்சமாகத் நகர்த்தி த்  தேருக்குள் அமர வைக்கின்றனர்.
இது மிக முக்கிய  காட்சி .ஏன் என்றால் சில நேரம்  அவர் 
மிக எளிதாக உள்ளே நுழைந்து விடுகிறார் .சில நேரம் 
பல மணி நேரம் போரடினாலும்   அசைந்துக் கொடுப்பத்தில்லை. உள்ளே அமர  மறுக்கிறார் ,அந்தச்
சமயத்தில் பிரதம பூசாரி திரும்பவும் குளித்து ஏதாவது
தவறு இருந்தால்  அதற்கு மன்னிப்புக் கேட்டு பின் எல்லோரும் சேர்ந்து
மனம் ஒன்றி உள்ளே நாமங்கள்  கூறி
அந்தச்சிலையை  நகர்த்துகிறார்கள்  அப்போது “கிடுகிடு “
உள்ளே ஏறும் அதிசயம் சொல்ல இயலாத  ஒன்று ,
இதைப் பார்க்கும் நமக்கு மயிர்க்கூச்ச்ல்  ஏற்படுகிறது ,
இதே போல் பலராமர் ,சுபத்திரையும்  தேருக்குள்ளே 
அமர எல்லோரும்   ஒரே நேரத்தில் குரலை உயர்த்த,
பகவான் நாமாவின்   முழக்கம் விண்ணைத் தொட
பட்டாசு வெடிகள் வெடிக்க ,வாண வேடிக்கைக் கிளமப 
சங்கு ஊத  தாரைகள் முழங்க .நாதஸ்வரம்  ,ஷெனாய் 
ஒலி பரவ  , மூன்று தேர்களும் அசைந்து அசைந்து ப்வனி வர ,,ஆஹா  அந்தக் காட்சியைக் காணக்
கொடுப்பினை  வேண்டும்  .காணக்கண் கோடி வேண்டும் .
எல்லோரும் தேர்   வடத்தை முழு ம்ஊச்சுடன் இழுக்க  ஆடி அசைந்து வருகிறார்  இறைவன் .அருகில்
தொங்கும்  தோரணங்கள்  ஆடி   அழகைப் பெருக்குகின்றன.
குஞ்சலங்கள்  ஆடுகின்றன ..இறைவன் நம்மையும் 
ஆட்டுகின்றான் .நாமும்  ஆடுகின்றோம்   வேதங்கள்
ஓதும் கூட்டம் ,பஜனைச் செய்யும்  கூட்டம் ,அதன் பின்னால் ஆடல் பாடல்கள் .என்று  எங்கும்  மகிழ்ச்சியின்
அலை மோத , ஜன சமுத்திரத்தில் தேர்கள் கப்பல் போல்
அசைந்து ஆடி செல்லுகின்றன. பலவிதமான 
மணிகளின்  “டிங் டிங்” என்று   ஒலி  நம்மை பரவசம்
அடையச் செய்கிறது ,இத்துடன்  பல சின்னத் தேர்களும்
வந்து சேர்ந்து ஊர்வலம்  போகின்றன ,மக்கள் கூட்டத்தை
மேலிருந்து  பார்த்தால்  ஒரே கடுகு  சிதறியது போல்  தோற்றமளிக்கிறது. அத்தனைத் தலைகள் ,இடம் போதாமல் மரம் உச்சி  ,மொட்டைமாடி   போன்ற
இடங்களிலும்  ரொம்பி  வழிகிறது ,பூசாரி எல்லோருக்கும்
பிரசாதம் கொடுத்தபடி வருகிறார் .போலீஸ் படைகளும் தங்கள் கடமையைச் சிறப்பாக செய்கின்றனர் நடுநடுவே
தண்ணீர்ப்பந்தல்    நீர்மோர் சர்பத்   என்று பலர்   தானம்
செய்கிறர்கள்.முடிவில்   ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும்
தேர்கள் வந்து நிற்கின்றன .எல்லோரும்  அந்தக் கமலக்
கண்ணனை  ஜகன்நாதனை   ,ஜனார்த்தனனை  வீட்டுப்
போக ம்னது இல்லாமல் அவன்  அருளை வேண்டி
வணங்குகின்றனர் .ஜன்ம  சாபல்யம் எனபது   இதுதானோ!
இந்த இடத்தில் ஆறு நாட்கள் இருந்துவிட்டு  பின் தன் கோவிலுக்கு திரும்புகின்றன  தேர்கள்,இந்தியாவிலேயே
பல  மக்கள்  கலந்து  கொள்ளும் மிகப் பெரிய தேர்த் திருவிழா இந்த “ஜகன்நாத்  யாத்ரா ”  
 
பகவான் பாபா சொல்கிறார், ” ஆலய விழாவாகத் தேர் இழுப்பதை நமது உடம்பை ஒட்டிய வாழ்க்கைக்கு 
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் .தேரின் நடுவில்  இறைவன்  இருப்பதுப்போல்  நம்க்குள்ளும் ஆன்மா  ஒரு இறைவன் ,
தேரை இழுப்பதுப்போல் ஆசாபாசங்கள் நம்மையும்
இழுக்கின்றன தேருக்கும் முன்னால் செல்லும் இசை
ஆடல் பாடல்  நம் வாழ்க்கையில் வரும் விழாக்கள்
ஊர்வலம் முடிந்தவுடன்  இறைவன் ஆலயத்தின் 
கர்ப்பககிரஹத்திர்குள் நுழைந்து விடுவது  நம் வாழ்க்கை  முடிவடைந்து ஆத்மா    அதுவரை வாழ்ந்த நிலை விட்டு வந்த இடத்திற்கே திரும்புகிறது  “
 
தேர்த் திருவிழாவை வளர்ப்போம்   அந்த இறைவனின்
திருவருளைப்  பெறுவோம்  

3 Responses to பூரி தேரோட்டம்

  1. Kannan says:

    மிகவும் நல்ல பதிவு

  2. lakshmanan says:

    amma, super…

  3. pradheep360 says:

    தேரில் இவ்வளவு விசியங்கள் உள்ளதா?

Leave a reply to Kannan Cancel reply