எல்லாமே நம்பிக்கைத்தான்

அதோபறக்கிறது மூவர்ணக்கொடி.
வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி ,
பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் ,
அங்கே தேசபக்தி  மணக்கும் ,
தேசியக்கொடி ஏற்றம்
நம்முன் பாரத அன்னையின் தோற்றம் ,
நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,,

அதோ தாத்தாவின் புகைப்படம்
அதன் முன்  இனிப்பு சம்படம்
படையல் படைக்கும் உறவினர்கள்
ஆசிகள் வழங்கும் முன்னோர்கள்.
தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை
கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை
நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால்,,,,,

மறைந்தத் தலைவர்கள் சிலையாக ஆட்சி
பிறந்த நாட்களில் மாலைகளுடன் காட்சி
கைக்கூப்பிக் கண் மூடி நினைக்கும்  மக்கள்
 ஆசிகளை வேண்டி நிற்கும் தொண் டர்கள்
தலைவர்கள் பேசிய   பொன்மொழிகள்,
நம்பிக்கையில் தலைவரையே கண்ட உணர்வு ,
எல்லாமே நம்பிக்கையால்,,,,,,,,,,

புகைப்படங்களில் தெய்வ உருவம் ,
கடவுளாகத் தோன்றும் அந்த ரூபம்
தீப வடிவில் தேவியின் தரிசனம்
பார்த்தால் பரவசம் ஆகும் சிலர் மனம் ,
கல்லிலும் கடவுளைக் காணும் மனிதன்
சிகரத்திலும் இறைவனை தரிசிக்கும் மனிதன்
நம்பிக்கையில் கடவுளைக் கண்ட உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,

அன்புடன் விசாலம்


Advertisements

One Response to எல்லாமே நம்பிக்கைத்தான்

  1. Kannan says:

    நல்ல கவிதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: