புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாக
பௌர்ணமி  ஒளிப்பெற்றது  விசாக பௌர்ணமி  மோக்ஷநிலை அடைந்ததும் விசாக
பௌர்ணமி ,மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை

சுத்தோதனின்  உத்தம புத்திரன,
அருமை மகன் , அவன் சித்தார்த்தன் ,
கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான்
உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்
ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம்
”பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் ”
அரசகுமாரன் ஆக்கும் முயற்சி
கொடுக்கப்பட்டது பல பயிற்சி
தந்தையின் அதிக பராமரிப்பு
தாயின் அதிக ஆதரிப்பு ,
கவசமான பெற்றோர்கள்
சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்
அரண்மணைக்குள் பல வித்தைகள்
விதைக்கப்பட்டன பல கலைகள்

 மனம் நிறையவில்லை,
எதிலும் சுவையில்லை
மனதில் தெளிவில்லை
ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை
அவனுக்குத் தேவை ஒரு மாற்றம்
அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்
வந்தால் கிளிப்போல் ஒரு கன்னி
”யசோதரா” அவனையே எண்ணி,
ஒரு மகனையும் அளித்தாள்
ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்

ஒரு நாள்,,அந்த நாள்
யசோதராவிற்கு சோதனை நாள்
உலகத்திற்கு நல்ல நாள்
வெளி வந்தான் சித்தார்த்தன்
தேரிலே பவனி வந்தான்
தேரோட்டியும்  உதவினான்
அரண்மணை வெளியே வந்தான்
வாழ்க்கையில் அதுவே திருப்புமுனை
கௌதமபுத்தர் ஆன அரிய சுனை

கண்டான் அங்கு ஒரு தொண்டு கிழவன்
கூனல் முதுகு ,
கையில் தடி
காலில் நடுக்கம்
மனம் பதைபதைத்தான்
சித்தார்த்தன்
இதுவா வாழ்க்கை ?

தொடர்ந்தபிரயாணம்
கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடல் ஆட
உள்ளம் தாக்க
கண்கள் சொருக
மரமாக சாய
ஆ இது என்ன ?
இப்ப்டியும் ஒரு பிறப்பா ?
இதுவா வாழ்க்கை ?

மேலும் தொடர்ந்தான்
வந்தது ஒரு சவம்
எங்கும் நிரம்பிய சோகம்
சிவமாய் இருந்த உடல்
இன்று ஏன் சவமானது ?
ஒரே குழப்பம் !
மனதிலே கேள்விக்குறி1
விரகித்தியடைந்த மனம்
கேட்டது ஒரு வினா
இதுவா வாழ்க்கை?
வேண்டாம் வேண்டாம்
ஆடம்பரம் வேண்டாம்
ராஜ போகம் வேண்டாம்
வேண்டும் நிம்மதி
வேண்டும் அமைதி
வேண்டும் ஒரு தேடல்
பிறப்பின் காரணம் தேடல்
படைத்தவனைத்தேடல்

மனம் தத்தளித்தது
வீடு கசந்தது
நல்லிரவு  .
மனைவி யசோதராமீது ஒருபார்வை
பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை
வைராக்கியம் புகுந்தது
எல்லாம் உதறினான்
உள்ளோளி தேடினான்
திரும்பிப்பாராமல்
வேகமாய் நடைத் தொடர்ந்தது
தேடலும் தொடர்ந்தது
”கயாவில்  சென்று நின்றது
தியானத்தில் நிலைத்தது
நீண்ட தியானம்
அரச மரத்தின் கீழ்
தன்னை மறந்த நிலை
திடீரென்று ஒரு ஒளி
அவர் அனுபவித்த பரமானந்தநிலை
உள்ளே ஒளி தெரிந்தது
ஞானோதயம் பிறந்தது
”கௌதமபுத்தர் ” ஆனார்
எட்டடி பாதைகள்.”பிறப்பு
புத்தமதத்தின் சிறப்பு
ஆயிரம் பிறையும் கண்டார்
”ஆசியாவின் ஒளி”யும் ஆனார்

அன்புடன் விசாலம்


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: