தலையைத் தாங்கிப்பிடித்த மாருதி 3

June 23, 2009

>>  அந்தசாது சொன்னபடி  அவருக்கு பசும்பால் தினமும் வந்துக்கொண்டிருந்தது
>> ,ஆனால் சில சம்யங்களில் எதாவது
>> கடைஅடைப்புகள் அல்லது காடி ரோக்கோ {ghaadhi rokko}என்று தில்லியில்
>> கலவரம் வரும் நேரத்தில் இந்தச்செயல் கொஞ்சம்
>> தடைப்பட்டது  பார்த்தார் ரிஷிகேசத்தில் இருந்த சித்தர் ,,அவசரமாக
>> நல்ல பசுவும் அதன் கன்றுக்குட்டியையும் வாங்கி  அந்தப்பெண்
>> இருந்த இடத்திற்கு அனுப்பியும் வைத்தார் ,
>> ஒரு நாள் வெள்ளிக்கிழமை ரகர்புராவில் அவர் வீட்டு வாசலில்
>> பசுவுடன் அதன் குட்டியும் நின்றது கூட வந்த் ஒருவர் அவை
>> ஆஸ்ரமத்திலிருந்து வந்தது எனவும் அந்தச்சாது மஹராஜ் அனுப்பி இருக்கிறார்
>> என்றும் கூறினார்
>> பத்மாஜியின் அப்பா ” ராமா இது என்ன விளையாட்டு நான் எப்படி
>> இதைப்பராமரிப்பேன் வீடு ஒட்டவே பணம் போதவில்லை பையன்
>> படிப்பு சிலவு பார்ப்பேனா  இன்னொரு பெண்ணின் கல்விக்கு
>> சிலவு செய்வேனா கோமாதாவை ரட்சிக்க நிறைய சிலவாகுமே ”
>> என்றெல்லாம் கலங்கினார் ஆனால் வந்தவரோ அவர் எண்ணத்தைப்
>> புரிந்தாற்போல்  ”ஐயா  இதைப்பராமரிக்கும் சிலவு எல்லாம் எங்கள்
>> ஆஸ்ரமம் கொடுத்து விடும் கவலைப்படாதீர்கள்”என்றார்
>> யார் அந்த குருஜி நம் பெண்ணிற்கு இத்தனை உதவுகிறார்,
>> அவருக்கு ஏன் நம் பெண்ணின் மேல் இத்தனைப்பாசம்  ”என்று குழம்பிப்போய்
>> அந்தத் தந்தை இதை விசாரிக்க ரிஷிகேஷ் கிளம்பினார்
>> ஹரித்துவாரில் ஹர்கி பைரி என்னும் இடத்தில் கங்கை ஓடுவதை நமஸ்கரித்து
>> ஆர்த்தி காட்டிவிட்டு ரிஷிகேஷை அடைந்தார்
>> அங்கு இந்த ஆஸ்ரம முகவரியைத் தேடி அந்த இடத்தையும்
>> அடைந்தார் ,அந்தச்சாது மஹராஜ் அவரை இன்முகத்துடன்
>> வரவேற்று ரொட்டி தாலுடன் பழங்களும் கொடுத்து உபசரித்தார் பின் சொன்னார்
>> ”நீங்கள் வந்தக்காரணமும் கேடகப்போகும் கேள்வியும் எனக்குத்
>> தெரியும்,உங்கள் பெண் போன ஜன்மத்தில் என் தாயாக இருந்தவர்
>> இந்தச்சன்மத்தில் அவர் ஆன்மீகத்தில்
>> ஒரு பெரிய சாதனையாளராக வரப்போகிறவர் இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்த
>> ஆஸ்ரமத்திற்கே வந்துவிடுவார்
>> குடும்பபந்தத்தில் அவர் சிக்காமல் சன்யாசினி போல் வாழும் வாழ்வுக்கு அவர்
>> மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறார்”
>>
>> தந்தைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தன் வீட்டில்
>> அவள் முகமாவது பார்ப்போம் அவள் முழுவதும் விட்டு இங்கு வந்து விட்டால் ?
>> அந்தத் தாயும் இதை எப்படித் தாங்குவாள்?
>> என்று பல யோசனையில் ஈசவரோ ரக்ஷது என்று நினைத்து ..திருமப வந்துச்சேர்ந்தார்


தலையைத் தாங்கிப்பிடித்த மாருதி

June 23, 2009

>>> நான் அந்தபெண்ணின் விட்டிற்கு அடிக்கடி போய் வருவேன் .அந்தப்பெண்ணின்
>>> பெயர் பத்மா  அவளது அண்ணாவின் பெயர் திரு வைத்தியநாதன்  அவர் அப்பா ஒரு
>>> சிறந்த ராமபக்தர் அவரது வீட்டில் சுந்தரகாண்டம்  தினமும்   படிப்பார்
>>> ,என் அக்கா நீலா அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர், அவர்
>>> தினமும்  அவரது வீடு போய் அந்தப்பத்மாவைப்பார்த்து வருவது வழக்கம் , நான்
>>> ஒருநாள் அவரது வீடு போயிருந்தேன் .”மாமி  பத்மா இப்படியே
>>> உட்க்கார்ந்திருக்கிறாளே பசி தாகம் இருக்காதா?என்ன சாப்பிடுகிறாள்,உடம்பு
>>>  வீக்காக போய்விடுமே ”என்றேன்
>>> ”அவள் காலையில் கொஞ்சம் பொங்கல் பிரசாதமும்  மாலையில் பாலும் பழமும்
>>> பிரசாதமாக எடுத்துக்கொள்கிறாள்” என்றார்
>>>
>>> அப்பப்பா  இந்தச்சின்ன வயதில் ஐம்புலன்களையும் கட்டி வைராக்கியத்துடன்
>>> இப்படி தியானத்தில் அமருவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்தான்
>>> ,,,,,”அவள்”  என்று கூறிய நான் அந்தப்பெண்ணை மரியாதயாக
>>> ‘அவர்’ என்று மாற்றிக்கொண்டேன் ,அவர் கண்களைப் பார்க்க
>>> ஒரே தேஜஸ் ,,பார்த்தாலே  ஏதோ இமாலய்த்தில் பல்லாண்டுகள்
>>> தவம் இருந்த சக்தி கண்களில் தெரிந்தது  சிலரது கண்களைப்பார்த்தாலே
>>> தெரிந்துவிடும்  தியானத்தில் ஊறி  வெற்றிபெற்றுவருபவர்கள் என்று
>>> ,,,,,சிலரது கண்கள் தியானத்தில் இருந்தாலும் மாந்திரீகம்
>>> போன்றச்செயலில்   ஈடுப்பட்டிருந்தால்
>>> அந்தக்கண்களின்  ஒளியும் வேறுவிதமாக இருக்கும் நேருக்கு நேர்
>>> பார்க்க முடியாமல் எதோ தடுக்கும்
>>> இந்தப்பத்மாவைப்பார்க்க   மனமெல்லாம் பரவசம் அடையும்
>>>
>>> ஒரு நாள்,,ரிஷிகேசத்திலிருந்து ஒரு சாது  திடீரென்று எழுந்தார்
>>> அவர் ஒரு சித்தர் எனலாம்  அவர்து சிஷ்யரை அழைத்து
>>> ”நீ நேராக தில்லி போ அங்கு ரகர்புராவில் இருக்கும் இந்த முகவரியில்
>>> சென்று  இந்தப்பசுமபாலைக்கொடுத்துவிட்டு வா,
>>>
>>> நாளையிலிருந்து இங்கிருந்து  பசும்பால் தினமும்  காலை அங்கு சென்று
>>> கொடுக்க ஏற்பாடு செய்துவிடு ”என்றார்
>>> பத்மாவின் வீடு ,,,,,,,காலை 6 மணி ,,,ஒரு தாடி வைத்த மனிதர்
>>> கதவைத் தட்டினார் அந்த அம்மாவும் கதவைத் திறந்தார் ,
>>> பால் நிரம்பியச்செப்பு சொம்பை நீட்டி இங்கு தியானம் இருக்கும்
>>> பெண்ணிற்கு இந்தப்பசும் பாலைக் கொடுங்கள் இனிமேல் எருமைப்பால் தரவேண்டாம்
>>> ”என்றார் ,அந்த அம்மாவும்  அதை வாங்கிக்கொண்டார் பின்னர் விவரம்
>>> கேட்டதில் ரிஷிகேசத்திலிருந்து
>>> வந்தது என்றும் தினமும் இதைபோல் அந்த ஆஸ்ரமத்திலிருந்து வரும்
>>> என்றார்,,,,,,,,,
>>>
>>> தொடரும்


தலையைத் தாங்கிப்பிடித்த மாருதி 1

June 23, 2009

நான் தில்லியில் படிப்பித்த DTEA  பள்ளியில் ஒரு சிறு பெண் வந்து
>>>> சேர்ந்தாள் ,ஆனால் அவளுக்கு படிப்பில் நாட்டம் இல்லை எப்போதும் கண் மூடி
>>>> அமர்ந்து விடுவாள், அவள் வாய் ராமநாமாவை விடாமல் முணுமுணுக்கும் ,அவள்
>>>> வீடு எங்கள்
>>>> வீட்டிலிருந்து நடந்துப்போகும் தூரம்தான் ,படிப்பில் ஒரு 50%
>>>> வாங்கிவிடுவாள் , அவள் ஐந்தாவது வகுப்பு வந்ததும் அவள் தாயிடம் தான்
>>>> பள்ளிக்குப்போக விருப்பமில்லை என்றிருக்கிறாள்
>>>> அவள் தாய் காரணம் கேட்டவுடன் தனக்கு ராமநாம ஜபம் செய்ய நேரம்
>>>> கிடைப்பதில்லை தான் வீட்டில் இருந்தால் ஜபிக்க்கத்தடை
>>>> இருக்காது  என்றாள். சில ஆசிரியர்கள் நண்பர்கள் கல்வியின் முக்கியத்துவம்
>>>> பற்றிச்சொல்லியும் அவள் மனம் ராமநாமத்திலேதான்  லயித்தது ,அவள் பள்ளி
>>>> வாராமல் நின்றுவிட்டாள் பின் அவள் வீட்டில் சாப்பிடும் நேரம் தவிர கண்கள்
>>>> மூடியபடியே ராமநாமம்  சொல்லிக்கொண்டே இருப்பாள்,
>>>> அவள் பெற்றோரும் அவள் ஏதோ ஒரு பெரிய லட்சியத்திற்காகப்பிறந்தவள் என்று
>>>> அவள் போக்கிற்கு விட்டுவிட்டனர்.தன் 12 வயது ஆரம்பத்திலேயே
>>>> பூப்பெய்தினாள்.
>>>> அது அவளுக்கு மிகவும் இடைஞ்சல் தந்ததால்   அவள்  ஹனுமார் படத்தின் முன்
>>>> மனமுருகி  இதை நிறுத்துமபடி வேண்டினாள் ,  என்ன ஆச்சரியம்  ஒரு 6 மாதம்
>>>> கழிநதப்பின்
>>>> அவளின் மாதத்தொல்லை நின்றுவிட்டது .
>>>> ஒரு வருடம் சென்றது  அவள் கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப
>>>> பந்தத்திலிருந்து  கழண்டுக்கொண்டாள்,அவள் இருந்த வீடு சின்னவீடுதான்
>>>> ,அதில் எல்லோருடையக்குரல் டிவி சத்தம்  என்று கேடபது தடையாக இருந்ததால்
>>>> தனக்கென்று ஒரு தடுப்பு அறை
>>>> போட்டுத்தரும்படி அவள் அப்பவைக்கேட்டுக்கொண்டாள்
>>>> அவரும் தன்  மகளுக்காக partition தடுப்புஅறைக்கட்டிக்கொடுத்தார்  கதவு
>>>> வைக்க முடியாமல் ஒரு திரைச்சீலையைக்கட்டிகொடுததார்
>>>> ஆயிற்று ஒரு அழகிய பூஜை அறை அதில் பழையகால ராமர் பட்டாபிஷேகம்  படமும்
>>>> தனியாக மாருதியின் சின்னச்சிலையும்  வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன
>>>> ,தினமும்  இரு வேளையும் பிரசாதமும் வைக்கப்பட்டன் பிரசாதம் கல்கண்டு
>>>> பேரிச்சம்பழம் அல்லது திராட்சைப்போன்றது தான் ,அவளப்பொருத்தவரை பூஜை
>>>> எல்லாம் ராம நாமம் சொல்வதுதான் ,,.
>>>> ஒரு நாள் தன்  பெற்றோரிடம்  தான் மூன்று நாடகள் விடாமல்
>>>> தியானத்தில் இருக்கப்போவதாகவும் தன்னை எதற்கும் கூப்ப்பிடாமல்
>>>> இருக்கும்படிக்கேட்டுக் கொண்டாள்..
>>>> அவள் தாய்க்கு மனம் பதறியது இந்தச்சின்ன வயதில் இப்படி ஒரு
>>>> சாதகமா ? பசிக்காதா? வயது 13 தானே ஆகிறது  என்று மனம்
>>>> கலங்கியது ,அவள் அப்பாவோ  எல்லாம் ராமர் பார்த்துக்கொள்வார் என்று
>>>> மனைவியைச்சமாதானப்படுத்தினார்
>>>> ஒருநாள் ஓடியது  பின் இரண்டாவது நாளும் முடிந்தது மூன்றாவது
>>>> நாளில்  தன் மகள் என்ன செய்கிறாளோ என்ற கவலையில் அவள்
>>>> தந்தை  திரைச்சீலையை சற்று ஒதுக்கிப்பார்த்தார் ,ஆஹா அங்கு அவர் கண்ட
>>>> காட்சி ,,,,அவள் மகள் மயங்கி தலைச்சாய்ந்து இருக்க
>>>> அங்கு ஹனுமன் அவள் தலையைத் தன் இரு கைகளால் தாங்கி கீழே விழாதபடி
>>>> பிடித்துக்கொண்டிருந்தார் ,அவருக்கு இந்தக்காட்சியைக்கண்டு மயக்கமே
>>>> வந்துவிட்டது .என்ன பாக்கியம் !
>>>> என் பெண்ணிற்கு இப்படி ஒரு பாக்கியமா? நான் அவளைப்பெற
>>>> என்ன புண்ணியம் செய்தேனோ என்று பெருமையடைந்தார்
>>>> அவளைப்பார்க்க நானும் போயிருந்தேன் ,மெய் மறந்து அவள்
>>>> அமர்ந்தவிதம் அவள் சாதாரண்மானப்பெண்ணல்ல போன் ஜன்மத்தில் பெரிய ரிஷியாக
>>>> இருக்கலாம் என்று தோன்றியது
>>>> தொடரும் ………
>>>> அன்புடன் விசாலம்
>>>>


இரு படகுகள்

June 23, 2009

நம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்,
வாழ்க்கை என்ற  படகைக்கண்டேன் ,
மனம் என்ற பாய்மரம் கண்டேன் ,
கடவுள் அன்பு காற்றாய்க்கண்டேன்
கருணைத் தென்றல் அங்கு வீசக்கண்டேன்
மனம் அங்கு விரியக்கண்டேன் ,
அன்பெனும் துடுப்பைச்செலுத்தக்கண்டேன் ,
தெய்வபலம் அங்குப் புகுவதைக்கண்டேன்,
சோதனையில் சாதனை பெருகக்கண்டேன்
எதிர்நீச்சலில் மன உறுதி வலுக்கக்கண்டேன்
வாழ்க்கைக்கடலின் இன்பம் உணரக்கண்டேன்
இயற்கையில் தெய்வதரிசனம் அங்கு கண்டேன்

இரண்டாவது படகு ,,,,,,

அவநம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்
வாழ்க்கைப்படகு அங்கு மிதக்கக் கண்டேன்
மனம் என்ற பாய்மரம் இறுகக்கண்டேன்
வெறுப்பு என்ற துடுப்பு செலுத்தக்கண்டேன்
பேராசை,பொறாமை அலைகள் வீசக்கண்டேன்
குறுகிய மனத்தில் புயல் வீசக்கண்டேன்
சூராவளி ஒன்று அங்கு அடிக்கக்கண்டேன் ,
வாழ்க்கைப்படகு தத்தளிப்பதைக்கண்டேன்
மன உறுதி அங்கு துவளக் கண்டேன்
மனச்சாட்சி அங்கு மடியக்கண்டேன்
இறைச்சக்தி அங்கு மறையக்கண்டேன்
ஒளி அடங்கி மன இருளில் ஒடுங்கக் கண்டேன்
வாழ்க்கைப்படகில் அங்கு துன்பத்தைக்கண்டேன்


கற்பகத்தரு

June 23, 2009
நிலவாக உன்னை நினைத்தாலோ,
காலை காணாமல் போய்விடுவாய்
மலராக உன்னை நினைத்தாலோ
ஒரு நாளில் நீ உதிர்ந்துவிடுவாய்,
வானவில்லாக உன்னை நினைத்தாலோ
கணநேரத்தில் நீ மறைந்து விடுவாய் ,
பனித்துளியாக உன்னை நினைத்தாலோ
வெயில் பட மறைந்து விடுவாய் ,
அலைகளாக உன்னை நினைத்தாலோ 
காலை முத்தமிட்டு ஓடி விடுவாய் ,
மலையாக உன்னை நினத்தாலோ
கல்மனம் போல் நீ  மாறிவிடுவாய்.
நீராக உன்னை நினைத்தாலோ
பனிக்கட்டிப்போல் உறைந்து விடுவாய் ,
உன்னை நான் ஒன்றும் நினைக்க்வில்லை
எனக்கு நீ    நீயாகவே   இரு 
என்றுபோல் நீ ஒரு கற்பகத் தரு 
 
அன்புடன் விசாலம் 

குறைந்த சுமை நிறைந்த வாழ்க்கை

June 23, 2009
வாழ்க்கை எனும் ரயில்  பாரு
குறைந்த சுமையுடன்  அதில் ஏறு
அதிக சுமைகள் அங்கு  தாங்காது , 
உள்ளே இடமும்  போதாது .
சுமைகள் பத்திரமாய் காத்தல்
வரும் மனதில் உளைச்சல் .
சுமைகளால் வரும் பிரச்சனைகள்,
ஆசைகளே அதன் காரணங்கள் .
இலேசான சுமைகள் தூக்கவது சுலபம்
சுமைகள் இல்லையெனில் அதைவிட லாபம்
பந்தபாசச்சுமை    கனத்த எடை ,
 மேலே ஏற அது ஒரு தடை ,
பேராசை சுமைகளை வளர்க்கும்
ஆன்மீக வளர்ச்சியைத் அது தளர்க்கும்
மனசுமைகள் இறக்க வேண்டும் ஒரு கூலிக்காரன்
ஆன்மீக நிலையத்தில் நிற்கும்  ஒரு கூலிக்காரன்
கூப்பிட்டவுடன்   நம் முன் தோன்றுவான்
நம் சுமையை அவன் தாங்குவான்
அவன் தலையில் நம் சுமைகள் அமர்த்தி  
பெறுவோம்  நாம் முழு   நிம்மதி ,
நம்பிக்கையுடன்  சுமையைக் கொடுப்போம்
நம்பிக்கையுடன் அவன் பின் செல்வோம் .
 

கூர்ம ஜயந்தி

June 23, 2009
தசாவதாரம் எல்லோரும் அறிந்த  ஒன்று , நான் திரு கம்லஹாசன் நடித்த தசாவதாரத்தைச்
சொல்லவில்லை  அந்த மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள்,,, அதில் கல்கி அவதாரம் இன்னும் நிகழவில்லை.அதைப்பற்றி  கேள்விபட்டிருக்கிறோம் எல்லா அவதாரங்களும் ஒரு கெடுதலை
அழிக்கவே எடுத்தவைகள் ,தர்மத்தை நிலைநாட்டவும்  அதர்மம் அழியவும் எடுத்தவைகள்.
ராமர் இராவணனை அழித்தல் ,கிருஷ்ணன் கம்சனை அழித்தல் நரசிம்மர் ஹிரண்யகசிபுவை
அழித்தல் என்று ,,,,அவதாரங்கள் ,,,,தோன்றின ஆனால் இந்தக் கூர்மாவதாரம்  ஒன்றையுமே
அழிக்க  வராமல்  பலருக்கு நன்மைக்கொடுக்கவும்  பல பொருட்கள் தோன்றி நற்பலனைக்
கொடுக்கவும் எடுத்த அவதாரம் பிரதோஷம் என்ற சுப நிகழ்ச்சி உண்டாக்கிய அவதாரம்
கூர்மம்   என்றால் ஆமை ,,,, மஹாவிஷ்ணு ஏன் இந்த ஆமை ரூபம் எடுத்தார் ?
 
ஒருசமயம்  ஸ்ரஸ்வதி தேவி தேவலோக்ப்பெண்ணிற்கு ஒரு அழகிய மாலையைப்
பரிசாகக் கொடுத்தாள்,அவளும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வரும் போது
அங்கு துர்வாச முனிவர் எதிர்ப்பட்டார் ,அவரை அவள் வணங்கி தன் மாலையை
மரியாதையுடன் கொடுத்தாள் ,,,துர்வாசர் அதை எடுத்துக்கொண்டு வர எதிரில் தேவேந்திரன் தன் வெள்ளை யானைமீது பவனி வந்தான் ,தேவேந்தரனைப்பார்த்து துர்வாசர் 
தன்னிடமிருந்த மாலையை அவனிடம் கொடுத்தார் ,அவனோ மிகச்செருக்குடன்  அதை அலட்சியமாக வாங்கி தன் யானையின் மீது போட்டான்  யானையோ அதைக்கீழே தள்ளி
மிதித்தது ,வந்தது கோபம் துர்வாசருக்கு , ,,,,,,சாபம் கொடுத்தார் “ பணச்செருக்கால 
அலட்சியப்படுத்திவிட்டாய் ,செல்வத்தினால்தானே இந்த ஆட்டம் ஆடுகிறாய் !உன் செல்வம் 
எல்லாம் அழிந்துப்போகட்டும்”
 
சாபம் பலித்தது ,தேவேந்திரன் எல்லாம் இழந்தான் இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிய
அரக்கர்கள் அவனுடன் போருக்கு படை எடுத்தனர் , போரில் அசுரர்கள் இறந்தாலும் சுக்கராசாரியாரின் சஞ்சீவினி மூலம் பிழைத்து எழுந்தனர் ,தேவேந்திரன் 
செய்வதறியாது  பிரும்மாவிடம்  முறையிட அவர் மஹாவிஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார்,
ம்ஹாவிஷ்ணு  மந்தார மலையை மத்தாகவும்  வாசுகி பாம்பை கயிறாகவும் வைத்து
பாற்கடலைக் கடையும்படியும் அதில் வரும் அம்ருதத்தால் இழந்தச்செல்வம் திருமபவும் 
பெறமுடியும் என்றார்  அவனும் அதே போல்  பாற்கடலை   கடைய ஆரம்பித்தான்
ஆனால் மந்தரமலைஓரிடத்தில் நிலைக்கொள்ளாமல் இங்கும் அங்கும் ஆட ஆரம்பித்தது அதைத் தாங்கிப்பிடிக்க மஹாவிஷ்ணும் மிகப்பெரிய ஆமை உருவன் எடுத்து பாற்கடலுக்குள் சென்று மலையைத் தாங்கிப்பிடித்தார் ,
இதுவே கூர்மாவதாரம்
தன்னை  வைத்துக்கடையும் வேதனைத் தாங்காமல் வாசுகி நாகம் முதலில் விஷம் கக்கியது,
அதனால் மிகப்பெரிய அழைவு வந்துவிடும் என்று உணர்ந்து சிவன் அந்த ஆலாகல் விஷத்தை விழுங்க பார்வதி மனம் பதறி அவர் நெஞ்சை விஷம் கீழே இறங்காதபடி
பிடித்தாள் ,,,அன்று திரயோதசி மாலை  வேளை ,சிவன் நீலகண்டர் ஆனார் ,
அவர் மயங்கி விழாமல் இருக்கவும் நந்தி நடனம் ஆட  தேவர்கள்  முனிவர்கள் அவரது
ஆசிகள் பெற்று  அவரை வழிப்பட்டார்கள் ,
கூர்மாவதாரம்  தந்த சிறப்பு விரதம்  பிரதோஷவிரதம்
 
அடுத்ததாக வந்தது  காமதேனு  பசு  கேட்டதெல்லாம் கொடுக்கும் பசு ,,
பார்வதி அதைப்பெற்றுக்கொண்டாள்
பின் வந்தது ஒளியுடன் சுடர்விட்ட தங்கக்குதிரை பெயர் உச்சை சிரஸ்,,  அது ஆகாயத்தில்
பறக்கும் திறமை பெற்றது.
பின் வந்தது வெள்ளையானை ,,ஐராவதம் என்ற பெயர் ,,,அது இந்திரனுக்குச்சொந்தமாயிற்று,
 
பின் வந்தன்  மரங்கள்  மிகவும் சிரேஷ்டமான மரங்கள் ,  அவை  கற்பகத்தரு  ச்ந்தனமரம்  அரிசந்தனம்  பாரிஜாதம்  மந்தாரம் ,,,,இவைகளில் கற்பகத்தரு கேட்டதெல்லாம் கொடுக்கும்
மரம் ,,
அதன் பின் ஒரு மணிமாலை வந்தது  கௌஸ்துபம் என்ற பெயருடன் ,,,,,,
அதை அணிபவருக்கு எங்கும் வெற்றிதான்
அதற்குப்பின்  ஜேஷ்டாதேவி என்ற மூத்த தேவி வந்தாள் அவளுக்கு அங்கு இடம் கிடைக்காததால் பூலோகம் சென்றாள் ,பின் தேவலோகப்பெண்கள்  சுராதேவி தோன்றினாள்
அடுத்தபடி அழகே உருவாக  ஒளிவடிவமாக  ஸ்ரீதேவி தோன்றினாள்,
மகாவிஷ்ணுவே தன் மணாளன் என்று உணர்ந்து அவருக்கு மாலை இட்டாள் ,அதன் பின் சியாமந்தமணி தோன்றி பிரகாசித்தது  சூரியன் அதைப்பெற்றுக்கொண்டான்  பின்கடைசியாக வந்தார் தன்வந்த்ரி பகவான்  கையில் வைத்தியச்சுவடி, நான்கு கைகள்  அதில் சீந்தில் கொடி   அட்டைப்பூச்சி  அமிர்தகலசம்  ,,,,,,,,வைத்திய்ருக்கெல்லாம்  வைத்தியர் ,,அவர்
 
அம்ருதக்கலசம்  பெற ஒரே போட்டி அதைச்சமாளிக்க  மஹாவிஷ்ணு  மோகினி வடிவம் கொண்டு வரிசையாக அரக்கர்கள் தேவர்களை இருத்தி  சம்மாகஅமிருதம் அளித்தாள்
ஆனால் ஒரு அரக்கன் தேவன்  வேஷ்த்தில் வந்து அமர்ந்தது தெரிந்து தன் கரண்டியால் தட்ட தலைத்தனியாகவும்  வால் தனியாகவும்  விழுந்து இரு உருவங்கள் ஆயின ,அதுவே ராகுவும் கேதுவும் ,,,,,,,,,,,
 
மோகினியின் அழகில் சிவனும் மயங்க  ஹரிஹரபுத்திரன்  அவதரித்தான்
 
ஆக மொத்தம் இந்தகூர்மாவதாரத்தில் எத்தனை சுப நிகழ்ச்சிகள்  எத்தனை பொருடகள்
,,எல்லாமே வளர்ச்சிதான்
 
அன்புடன் விசாலம்

பழைய அமுது

June 23, 2009
சமையல் அறை  ,ஒரு மூலை ,
ஒரு கறச்ட்டியில் நீ ………..
நீர் விட்ட அமுது நீ
முதல் நாள் வைத்த அமுது நீ ,
 
மறு நாள்……..
என் அம்மாவின்  பக்குவத்தில் நீ
அவள் அன்பில் கட்டுண்டாய் ..
தயிறும் பாலும் சேர்க்கப்பெற்றாய் ,
சுவையான  அழகு உருவம் பெற்றாய் ,
கறுவேப்பலையுடன் நீ தொடக்கம்
வெள்ளரி மாங்காய் உன்னிடம் அடக்கம்
தாளித்தக்கடுகும் உன்னிடம் கொஞ்சும்
வறுத்த மோர்மிளகாயும் உன்னிடம் தஞ்சம்
 
இதோ நீ  த்யார் ,,
உன்னருகில் என் தாயார் ,
வரிசையாக அமரும் செல்வங்கள்
அன்பைப்பரிமாறும் உள்ளங்கள்
எடுத்தது மோகினி அவதாரமோ
கொடுப்பது அங்கு அம்ருதமோ .
முத்ல் பிடி அன்புடன் என் கையில் 
நடுவில் குழித்தது என் கட்டைவிரல்
உள்ளே சொட்டிய்து வற்றல் குழம்பு
என் தாயின் முகத்தில் புன்னகை அரும்பு
தொட்டுக்கொள்ள ஒரு  மாவடு,
வாசனைத்த்தூக்கும் அந்த வடு
அன்புடன் கொடுத்தாள் பொறுமையுடன் இருந்து
மகிழ்ச்சியுடன் இது குடுமபத்திற்கு  ஒரு விருந்து
 

கண்கள் ஜாக்கிரதை

December 18, 2007

கண்கள் ஜாக்கிரதை

அன்று நீ உன் வீட்டு வாசலில்

என் கவனமோ, உன்  மேல்

தாமரைப் போல் முகம்  மலர்ந்தாய் ,

என்னைக் கவர்ந்தது அந்தப் பார்வை

உள்ளே  போக தடுமாறினாய்

இரும்புக் கம்பியைப் பிடித்தாய்

மனம் பதைப்பதைத்தேன்,,

காதல் வந்ததை  உணர்ந்தேன் 

வில்லினையொத்தப் புருவம்  

அழகான தாமரைக் கண்கள்

ஆனால் பார்க்கும் சக்தி எங்கே?

என் கண்கள் கலங்கியது இங்கே.

ஒருநாள் உன்  வீடு ஏற ,

என் காதலை உன்னிடம் கூற

மகழ்வுடன் என்னை ஏற்றாய்

த்டவி என்னைப் பார்த்தாய் ,

கண்ணால் பார்க்க ஆசை என்றாய்

” உயிரையும் கொடுப்பேன் ” என்றேன்,,

கைச்சுருக்கி வாய் ஒடுக்கி

அங்கும் இங்கும் அலைந்து

புரட்டினேன்  பணம்

நிறைந்தது என் மனம்

அறுவைச்சிகிச்சை நடந்தது

ஒருவாரம் கழிந்தது

அவள் குரலைக் கேட்கச் சென்றேன் ,,

என்னைக்கண்டால் என்ன நினைப்பாள்?

தூரத்தில் நின்றேன் ,

உள்ளே பேச்சுக் குரல்

“டாகடர் அதோ நிற்பவர் யார்?

“உன்  காதலன் தான் “

“இவனா?  என் காதலன் ,

இத்தனைக்கறுப்பா ?

இத்தனைக் குண்டா ”?

 திடுக்கிட்டேன்  நான் ,

மனம் நொந்தேன் ,

கைத்தடியுடன்  அவளிடம் வந்தேன் ,

“என்னுடைய கண்களைப்

பத்திரமாகப் பார்த்துக் கொள்,

என் உருவத்தை வெறுத்தாற்போல்

என் கண்களை வெறுக்காதே”

வேகமாகத் திரும்பினேன்

கைத்தடி துணையுடன்

அன்புடன் விசாலம் ,,,


நான் இன்று அப்பா

December 17, 2007

கருத்தரித்த நாள் முதல்

உன் கவனம் என்னிடமே

கணந்தோறும் காத்தாய்

என்க்காகவே வாழ்ந்தாய்

என் உயிர் வளர்ந்தது

உன் உடல் மெலிந்தது

உணவு செல்லாது

மசக்கையில் தவித்தாய்

மனதில் கவலை

கணவனின் தொல்லை ,

பிள்ளைச் சுமை சுமந்து

கால்களில் விக்கம் கண்டு

மூச்சு முட்டத் தவித்து நின்று

என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தாய்

என் உதைகள் உனக்கு இன்பம்

பெருவலியில் உன் உயிர் பணயம்

சூல்வலியிலும் பொறுமை

என் உயிரே இப்போது உனக்கு உயிர்

குவா என்ற சத்தம்

கண்டாய் வலியில் இன்பம்

பாசத்தை முலைப்பாலாய் கொடுத்தாய்

என்னை வளர்த்தாய் 

நானும் வளர்ந்தேன் ,

இன்று நான் ஒரு அப்பா

உன் அன்புக்கு ஈடேதம்மா ,

அன்புக் கடனை எப்படி அடைபேன் அம்மா

எத்தனைச் சென்மம் எடுக்க வேண்டும்மா

எல்லா ஜன்மமும் என்க்கு நீதான்  அம்மா ,,,,,,,

அன்புடன் விசாலம்