> வீட்டிற்கு வந்த பத்மாஜியின் தந்தை மனம் கலங்கி நின்றார்.
> ”இப்போது நான் அவள் முகத்தையாவது பார்க்கிறேன் பின்னால அந்தச்சாது
> மஹராஜ்சொன்னது போல் அவள் வீட்டை விட்டுப் ஆஸ்ரமத்திற்குப் போய் விட்டால்
> என்ன செய்வது ?ஆனலும் இந்த மாதிரி ஆன்மீகத்தில் மேலும் பல சாதனைகள்
> செய்து என் பெண் உயர்ந்த இடத்தைப்பிடிக்கப்போகிறாள் .அவள் எங்களுக்குப்
> பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் அல்லவோ! எல்லாம் அவன் சித்தம் ”
> இப்படி நினைத்து ஆறுதல் அடைந்தார்
>
> அந்தப்ப்சுவும் கன்றும் அவர்கள் வீட்டுப்பின் பக்க சந்தில் கட்டப்பட்டன
> .பால் கறந்துக்கொடுக்க ஒருவர் நியமிக்கப்பட்டார் ,
> ஒரு வாரம் கழிந்தது ,அவர்கள் வீட்டு மறுபக்கம் ஜமேதார்னி இருக்கும் காலனி
> ,ஜமேதார்னிகள் பல வீட்டுக்கக்கூஸை கழுவி
> சுத்தம் செய்து வருவார்கள்,அந்த இடத்தில் கசாப்புக்கடைகளும்
> இருந்தன அந்தக்காலனியின் சிறுவர்களுக்குப் படிப்பு வராமல்
> ரோட்டில் திரிந்து கோலி விளையாட்டு கில்லி டண்டா விளையாட்டு பட்டம்
> விடுதல் என்று சமயத்தைக்கழிப்பார்கள்
> அவர்கள் கண்ணில் இந்தப்பசுவும் பட்டுவிட்டது ஆரம்பித்தது சேஷ்டை
> ,,,,,,,ஒருவன் வாலை முறுக்கினான் ஒருவன் கொம்பைப்பிடித்தான் .மேலும்
> சிலர் அருகில் வராமல் கற்களை வீசினர் ,
>
> ஆனால் பல கோமாதா பிரியர்கள் அதற்கு அகத்திக்கீரை ப்ழங்கள்
> எல்லாம் கொடுத்து பூஜையும் செய்தனர் ,இந்தச்சிறுவர்கள் தொந்தரவைப் பற்றி
> புகார் கொடுத்தால் போதும் அந்தச்சாதி சனம் எல்லோரும் ஒன்று கூடி ரகளைச்
> செய்து விடுவார்கள்.
> கன்னாப்பின்னாவென்று சொற்கள் பச்சை பச்சையாக வரும் .
> தந்தை இதனால் மனம் வருந்தி தன் மகளிடம் சொல்ல அவளது
> பூஜை அறைக்குச் சென்றார்பதமாஜி தியானத்தில் இருந்தாள்.
> சிறிது நேரம் கழித்து தந்தை தொண்டையைக் கனைத்தார் ,பத்மாஜி கண்கள்
> திறந்துப்பார்த்தார் ,
> அப்பா என்ன கவலையாக இருக்கிறீர்கள்?
> தந்தை எல்லாவற்றையும் விவரித்து பசுவை எப்படிக் காப்பாற்றுவது என்று
> தெரியவில்லை என்றார் ,
> ” அப்பா கவலையை விடுங்கள்,என் ராமநாமம் அதையும் காப்பாற்றும் ”
> என்றார் பெற்றோர்களின் மனம் நிம்மதி அடைந்தது .
> அவர்கள் வீட்டு அருகில் ஒரு கிருஷணன் கோயில் ,,,,,,
> சிறு கோயிலானாலும் மிக அழகு ,ராதா புன்னகைப்புரிய கண்ணன் வேணு வாசிக்க
> அந்தச்சன்னிதானமே பவித்ரமாக விளங்கும்,அதுவும் பளிங்குச்சிலைகளாக
> வடிக்கப்பட்டிருந்ததால் அதில் ஒரு பளபளப்பும் மின்னும் ,மக்கள் அங்கு
> வந்துகண்ணனின் பாதங்களை அலம்பி துளசி மாலை பூக்கள் போட்டு பாதங்களைத்
> தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள் அங்கு அகண்ட பஜனையும் நடக்கும்
> அவர்கள் செய்யும் பஜனையில் சிரத்தை இருக்கும் பக்தி இருக்கும் சிலர்
> கண்ணனுடன் நடனம் ஆடவும் தொடங்குவார்கள் மனம் ஒன்றி விடும் நிலைதான் ,,,,
> அந்த ராதாகிருஷ்ணன் கோயிலை நடத்துபவர் பத்மாஜியைப்பற்றிக்
> கேள்விப்பட்டு அவரைப்பார்க்கவும் தீர்மானித்தார்
>
>