கண்கள் ஜாக்கிரதை

December 18, 2007

கண்கள் ஜாக்கிரதை

அன்று நீ உன் வீட்டு வாசலில்

என் கவனமோ, உன்  மேல்

தாமரைப் போல் முகம்  மலர்ந்தாய் ,

என்னைக் கவர்ந்தது அந்தப் பார்வை

உள்ளே  போக தடுமாறினாய்

இரும்புக் கம்பியைப் பிடித்தாய்

மனம் பதைப்பதைத்தேன்,,

காதல் வந்ததை  உணர்ந்தேன் 

வில்லினையொத்தப் புருவம்  

அழகான தாமரைக் கண்கள்

ஆனால் பார்க்கும் சக்தி எங்கே?

என் கண்கள் கலங்கியது இங்கே.

ஒருநாள் உன்  வீடு ஏற ,

என் காதலை உன்னிடம் கூற

மகழ்வுடன் என்னை ஏற்றாய்

த்டவி என்னைப் பார்த்தாய் ,

கண்ணால் பார்க்க ஆசை என்றாய்

” உயிரையும் கொடுப்பேன் ” என்றேன்,,

கைச்சுருக்கி வாய் ஒடுக்கி

அங்கும் இங்கும் அலைந்து

புரட்டினேன்  பணம்

நிறைந்தது என் மனம்

அறுவைச்சிகிச்சை நடந்தது

ஒருவாரம் கழிந்தது

அவள் குரலைக் கேட்கச் சென்றேன் ,,

என்னைக்கண்டால் என்ன நினைப்பாள்?

தூரத்தில் நின்றேன் ,

உள்ளே பேச்சுக் குரல்

“டாகடர் அதோ நிற்பவர் யார்?

“உன்  காதலன் தான் “

“இவனா?  என் காதலன் ,

இத்தனைக்கறுப்பா ?

இத்தனைக் குண்டா ”?

 திடுக்கிட்டேன்  நான் ,

மனம் நொந்தேன் ,

கைத்தடியுடன்  அவளிடம் வந்தேன் ,

“என்னுடைய கண்களைப்

பத்திரமாகப் பார்த்துக் கொள்,

என் உருவத்தை வெறுத்தாற்போல்

என் கண்களை வெறுக்காதே”

வேகமாகத் திரும்பினேன்

கைத்தடி துணையுடன்

அன்புடன் விசாலம் ,,,


நான் இன்று அப்பா

December 17, 2007

கருத்தரித்த நாள் முதல்

உன் கவனம் என்னிடமே

கணந்தோறும் காத்தாய்

என்க்காகவே வாழ்ந்தாய்

என் உயிர் வளர்ந்தது

உன் உடல் மெலிந்தது

உணவு செல்லாது

மசக்கையில் தவித்தாய்

மனதில் கவலை

கணவனின் தொல்லை ,

பிள்ளைச் சுமை சுமந்து

கால்களில் விக்கம் கண்டு

மூச்சு முட்டத் தவித்து நின்று

என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தாய்

என் உதைகள் உனக்கு இன்பம்

பெருவலியில் உன் உயிர் பணயம்

சூல்வலியிலும் பொறுமை

என் உயிரே இப்போது உனக்கு உயிர்

குவா என்ற சத்தம்

கண்டாய் வலியில் இன்பம்

பாசத்தை முலைப்பாலாய் கொடுத்தாய்

என்னை வளர்த்தாய் 

நானும் வளர்ந்தேன் ,

இன்று நான் ஒரு அப்பா

உன் அன்புக்கு ஈடேதம்மா ,

அன்புக் கடனை எப்படி அடைபேன் அம்மா

எத்தனைச் சென்மம் எடுக்க வேண்டும்மா

எல்லா ஜன்மமும் என்க்கு நீதான்  அம்மா ,,,,,,,

அன்புடன் விசாலம்


மேட்ரிமோனியல்.காம்

December 17, 2007

பார்த்தேன் ஒரு விளமபரம்

அது” மேட்ரிமோனியல் .காம்” 

மண்மகள் தேவை 

கொடுத்திருந்தது 

பிள்ளையின் விருப்பம் 

“அழகுப் பெண்

படித்தப்பெண்

சிவப்புப் பெண்

ஒல்லிப் பெண்

நல்ல வேலையில் ,

வேண்டும் ஒரு மணமகள்

அவளே எங்கள் குல மகள்”

கேட்பவன் நிறம் என்னவோ ?

அவன் ஆசையும் அதிகமோ?

எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு

முடியும் எல்லையிலா தவிப்பு ,

பெண்ணிற்கும் தனி விருப்பமுண்டு

அதை வெளிபடுத்த உரிமை உண்டு

கறுப்பானாலும் வெளுப்பானாலும்

அன்பு என்பது ஒன்றுதான்

செய்யும் செயலும் ஒன்றுதான்

அதன் விளைவும்  ஒன்றுதான்

கறுப்பு பெண்ணிற்கும் குணம் உண்டு

பண்புடன் நல்ல  மனம் உண்டு

அள்ளித்தர அன்பு இதயம் உண்டு

கடமைத்தவறாத  செயலும் உண்டு

பின் ஏன்  ஏன்  ஏன்?

இந்த விளம்பரம் /

உள்ளத்தைப் புரிந்து கொள்

ஒட்டிவாழ கற்றுக் கொள்

அன்புடன் விசாலம்


ஸத்ய ஸாயி கவசம்

December 17, 2007

சாயி பக்தர்களுக்கு

அவர் பிறந்த நாளன்று அவரது கவசம்  அனுப்புவது  எனக்கு  மிக  மகிழ்ச்சி படித்து அருள்

பெறுவோம்

ஸத்ய சாயி கவசம்

ஊழ்வினையும்  தொடர்வரு பழவினனயும்  ஸாயி நாமம்  சொல்லப் பறந்திடுமே

பர்த்தி ஸாயி காக்க  என்று படிப்போர்க்கு கிடைக்கும்  இகபர இனபமே

1 தாயாக தன்னகத்தே ஈர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்

   சேயன் தன் அறிவு மிளிர சிரமதைக்காக்க

2 ஓங்காரத்தில்  வாழ்   ஆனந்த ரூபி  ஸ்ரீ ஸாயிராம்

   ஒருமையயம்  மனதில்  அமர்ந்து  நெற்றியினைக் காக்க 

3 எம்மதமும்    சம்மதித்திடும்   ஸ்ரீ ஸாயிராம்

  செம்மை சேர் வதனமதைச்  சீருடன் காக்க

4  கீதமழைப் பொழிந்த  ஆழிமழைக்கண்ணன்  ஸ்ரீஸாயிராம்

   தீது நோக்கா  திசைவிளக்கென   இரு கண்ணினைக் காக்க

5 அலைப்போன்று   அடங்காது   செயலுறும்  ஸ்ரீ ஸாயிரரம்

   புல்லறிவைப் புனிதபடுத்தி   இரு  புருவமதைக்   காக்க

6  விழலாகி   நொந்தவரின்   விதி மாற்றி விடும்  ஸ்ரீஸாயிராம்

    அழியாத  நின் புகழ்  கேடக   இரு  செவியினைக் காக்க

7   ஈஸ்வராம்பா  ஈன்ற    ஈசனவன்   ஸ்ரீ ஸாயிராம்

    ஈடில்லாது    ஈந்து  நாசியினைக்  காக்க

8  நந்தா    விளக்காம்    எங்கள் ஸ்ரீஸாயிராம்

   நல்லறம்  தழைக்க    வந்தவன்  இரு கன்னமதைக் காக்க 

9  பற்றில்லாபரமனவன்      எங்கள்   ஸ்ரீஸாயிராம்

   பற்றுவவத்தோரை பேணுபவன்   பற்களைக் காக்க  

10 ஆரவாரமற்ற   அமைதி உருவம் ஸ்ரீஸாயிராம்

   கோரிய வரமளித்து என் நாவினைக் காக்க  

11ஒளிவீச காட்சி அளிப்பவன் ஸ்ரீஸாயிராம்

    ஒழுக்க  ஆட்சி புரியும் அவன் கழுத்தினைக் காக்க 

12 நாளெல்லாம் பக்தரைச் சிந்தையில்  நிறுத்தும் ஸ்ரீஸாயிராம்

    வாழ்வெலாம்  நயந்து   எங்கள்  இரு தோளினைக் காக்க

13 கற்பகச்சோலையின்  கனி போலும்  ஸ்ரீஸாயிராம்

    பொற்கையினால்   திருநீறு ஈந்து  இரு கரமதைக் காக்க 

14   வேத நநயகன்      ஆத்ம போதகன்      ஸ்ரீஸாயிராம்

    பேதமொழிந்து    எம் முதுகினைக் காக்க  

15    தஞ்சமடைவோரைத்   தாங்கி அருளும் ஸ்ரீஸாயிராம்

      வாங்சையுடன்    விரைந்து    வந்து  நெஞ்சமதைக்காக்க்

 16 அறநெறி காட்டும்  ஸ்ரீஸாயிராம்

     மாறாத அன்புடன்  மார்பகம் காக்க

17   ஏன்  எவரென்று கேளாத ஸ்ரீஸாயிராம்

     பரிவுடன்  வந்தெமது  இடையினைக் காக்க

18  கருணையின்  கரையிலாக் கடல் ஸ்ரீஸாயிராம்

     தருணத்தில்  வந்தெமது  இடையினைக் காக்க

19 பெற்றவர்  தம்  பெருமை  சேர்க்கும்  ஸ்ரீஸாயிராம்

     கொற்றவன்   நீ குறியதனைக் காக்க

20   இச்சா- கிரியா ஞான  சக்தியாம்  ஸ்ரீஸாயிராம்

       இதய நாயகன்  இரு தொடையினைக் காக்க

21 கற்றவரும் வியந்துபோற்றும் கவிதைதெய்வம்ஸ்ரீஸாயிராம்

முற்றாத அன்புடன்  எங்கள் இரு பாத்ங்களைக்காக்க

22சத்யதர்மபோதனைகளின்  ஊட்டம் ஸ்ரீஸாயிராம்

    அவை என் அங்கமெல்லாம் நிறைந்து காக்க

23 சாதகர் நினைவில் ஒளிர்ப்பவன் ஸ்ரீஸாயிராம் -எம்

பேத ம்தியினை செம்மையுறக் காக்க

24  தஞ்சம் என்று வருவோரைத் தாங்கி அருளும்

    ஸ்ரீஸாயிராம்

   வஞ்சகரின்  அஞ்சுதலின்றும்  எமைக் காக்க

25  சத்தியஸ்வரூபன்  எங்கள் ஸ்ரீஸாயிராம்

     சத்தியம் பிறழாமல் எமைக் காக்க

26 தர்மஸ்தாபகன்  எங்கள் ஸ்ரீஸாயிராம்

     தரம் தளராமல்  எமைக் காக்க

27 சாந்தஜோதி  எங்கள்  ஸ்ரீஸாயிராம்

  காந்தமாகி ஈர்த்து   எமைக் காக்க

28  பிரேமஸாகரம்   எங்கள்    ஸ்ரீஸாயிராம்

     பவ  ஸாகரத்திலிருந்து  எமைக் காக்க

29  பளபள என் மின்னும்  குளிர்மணி விழியான்ஸ்ரீஸாயிராம்

  மாளாத குஷ்டமதை  மாய்த்துக் காக்க

30 வேதாகம மூல ஞான  வித்தகன்  ஸ்ரீஸாயிராம்

    வாதம் வலிப்பு பித்தமதைப் போக்கிக் காக்க

31 செக்கச் சிவந்த பட்டுடையான்  ஸ்ரீஸாயிராம்

  சொக்குச்சிரங்கு  குன்மமதைத்  தகர்த்திக் காக்க

32 கலலயனைத்தும்  படைத்த ஞானப்பிரகாசன் ஸ்ரீஸாயிராம்

சூலை சயம் அகல  அருள்வழி நோக்கிக் காக்க

33 மண்விண் ஊர்த்திமீதும்  நீரிலும்  நெருப்பிலும்

ஸ்ரீஸாயிராம்

கண் மலர் வீசி  எவ்விடத்திலும் காக்க

34 ந்டக்கையில்  கிடைக்கையில் நவில்கையில் நிமிர்கையில்

நாடிவந்து ஓடிவந்துஸாயிராம்  காக்க 

35என் அப்பன்  என் அன்னை  ஸ்ரீஸாயிராம் 

    என்றென்றும் அகந்தன்னிலிருந்து  காக்க 

36 பக்த பராதீனன்  எங்கள்  ஸாயிராம் 

     முக்தி நமக்களித்து  நன்மையுடன்  காக்க 

37  இசைப்பாட இன்குரல்  ஈவாய்  ஸத்யஸாயி 

   இனியகுணம் எமை அடைய காவாய் ஸத்யஸாயி 

38 தன்னலம் கருதா தகைமை  ஈவாய் ஸதயஸாயி 

  பிறநலம் பேணும்  பெருமை  தருவாய் ஸத்யஸாயி 

39 இன்பதுன்ப  சமநிலை  இருக்கச் செய்வாய் ஸத்யஸாயி 

   ஈகை  இரக்கம்  இவையாவும் இங்கு தருவாய்

ஸத்யஸாயி 

40 நீ நான் என்ற இரண்டு ஆகாய் ஸத்யஸாயி 

 நான் , நீ  ஒன்றென தோற்றுவாய்  ஸதய ஸாயி 

41 அன்ற்லர்ந்த  அன்பு  மலர்  எங்கள்   ஸாயி மன்னன் 

   என்றும்  உலராத  தம்  மலரடி  சேர்க்க !

42   சோதனைப் பல  ஈந்தாலும்   போதனையால் 

     வேதனை தீர்க்கும்  ஸாயி  எங்கள்  பதியவன் 

43  ஓம் ஓம் எனும்  ஓங்கார்த்தின்  உறைவிடமே ஸத்யஸாயி 

  ஒரு  நினைவாக நினை    தியானிக்க  ஸத்யஸாயி 

44  நீங்காத   பக்திதனை அருள  ஸத்யஸாயி 

    நின் கமல் மலர்ப்பாதம்   சரணம் 

சரணம்  சரணம் சத்ய ஸாயி

இதை நம்பிக்கையுடனும்  சிரத்தையுடனும்  படிக்க கஷ்டங்கள்   விலகுகின்றன 

அன்புடன் விசாலம்  

   


ஸாயி ராம்

December 17, 2007

ஸாயி பகதர்களுக்கு

நவம்பர் 23 ம் தேதி ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின்  அவதாரத் திருநாள் இந்த நாளில்

அவரது அவதாரஸ்தலமான புட்டபர்த்தியில்  லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து

அவரின் அருளைப்  பெறுகிறார்கள் நானும் பாதகமலங்களை வணங்குகிறேன் ,,,,,,,,,

அவர் பிறந்த  ரஹஸ்யத்தை  அவர் தாயார்  ஈச்வரம்மாஒரு சமயம் கூறினார்

” ஒரு  நாள்  காலையிலே  என் மாமியார் என்னிடம்” சத்திய நாராயண  ஸ்வாமி கனவிலே வந்தார்  அவர் சங்க்லபத்திலே உனக்கு எதாவது ஏற்படலாம் பயப்படாதே ன்னு சொன்னங்க

அந்தக்காலையிலேயே நான் கிணத்திலே ஜலம்  இழுக்கப் போனேன் அப்போ திடீர்னு எங்கேயிருந்தோ ஜொலிக்கிற  ஒரு நீல வெளிச்சம் பந்து மாதிரி  உருண்டு  என்னைக்குறி பார்த்து

வந்தது  அது எனக்குள்ளேயே  சுலபமா  நுழைஞ்சுட்டதாகத் தெரிஞ்சது அப்படியே மயக்கம் 

போட்டு விழுந்து விட்டேன் “

இன்னொரு சம்பவம்  இதையும் அந்தத் தாய் சொன்னார் “ நல்லா   தெளிவா நினவிருக்கு

அப்போ ஸ்வாமி ஒன்பது மாதக் குழந்தை ,குளிப்பாட்டி உடைபோட்டு  மையிட்டேன், 

வீபூதி வச்சு சத்யம்மா கோயிலில் குங்குமம் இட்டு தூளிலே போட்டு ஆட்டினேன்

அடுப்பிலே பால் பொங்கினதாலே இறக்க வந்தேன் குழந்தையோட அழுகைக் குர,ல் கேட்டது ,ஆச்சரியம் இதுதான் முதல் தடவை ,,அழும் குரல் கேட்பது ஓடிப்போனேன் மடியில் வைத்துக்கொண்டேன்  அதன் உடம்பு சுற்றியும் ஒரு ஜோதி வட்டம் சூழ்ந்திச்சு

நல்ல பிரகாசம் ஆனாலும் எனக்கு கண் கூசவில்லை ரொம்ப ஹிதமா ஜில்லுனு

இருந்தது அப்படியே மெய்மறந்து  உட்க்கார்ந்திருந்தேன்  என் கண் மூடிக்கொண்டது  சுற்றுப்

புற உணர்ச்சியே இல்லை என் மாமியார் வந்து  எழுப்பின் பிறகுதான் உணர்வு வந்தது”

பகவானின் பொன் மொழிகள்

நம் அனவருக்கும் ” தான்” என்ற கர்வமும் ஆண்வமும் இருக்கின்றது  இதன் காரணமாகவே

நமக்கு சுயநலம் உண்டாகி நம் சுயல்களெல்லாம் நம்மைச் சுற்றியேச் சுழன்று கொண்டிருகின்றன இநத ஆணவத்தை விட்டொழித்தால் மன்னிக்கும் மனப்பனமம உண்டாகும் ஆண்வம் ஒன்றே நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் 

பொறாமை மிகவும் பயங்கரமானது  எந்த நோய்க்கும் மருந்து கிடைக்கும ஆனால் பொறாமைக்கு

மருந்து கிடையாது துவேஷ்ங்கள் அழிவிற்கு காரணங்கள்   கௌரவர்கஹிரண்யாட்சன்

சிசுபாலன்  எல்லோரும் இதன் காரண்மாக அழைய நேரிட்டது ,

கோபத்தினால் நம் வலிமைக் குறைநதுபோகிறது..ஆரோக்கியம் குறைகிறது,

தலைக்கு மேல் விசிறி சுழ்ல்கிறது அதன் விசை நிறுத்தினால்  சுழற்சியின்வேகம் குறைந்து மெல்ல சுழன்று ஓய்ந்து

பின்  தான் நிற்கும் அது போல்  தீய குணங்களைக் கூட  அவைத் தீயவை என்று உணர்ந்து  மெல்லக் குறைத்துக்கொண்டே  வந்தால்  கடைசியில் நீங்கள் அதிலிருந்து 

விடுபடுவீர்கள் பின் மனத்தூயமை கிடைக்கும் 

மூன்று தத்துவங்கள்  அவற்றின படி நடந்தால்  எல்லாத்துறைகளிலும் மேம்பாட்டை அடைய முடியும்  முதலாவது  தெய்வத்தின் மேல் அனபு     தெய்வப்ப்ரீதி 

இரண்டாவது பாவத்தைக்கண்டு பயம்  {பாப பீதி } மூன்றாவதாக  சமூக நீதி {சங்க நீதி}  எல்லாவற்றுக்கும் மூலம் தெயவத்தின் மேல் அனபு  ,,,,,,,,,,பாபா  

சர்வே ஜனானா சுகினோ பவந்து  சாயிராம் 

அன்புடன் விசாலம் ,

  


குருநானக்ஜி

December 17, 2007

அன்பர்களே கார்த்திகை பூர்ணிமாவின் போது சீக்கிய மதஸ்தாபகர்  ஸ்ரீகுருநானக்ஜியின் 

பிறந்த நாள் வரும் ஆஹா அந்தக் குருத்வாராக்களைப் பார்க்கவேண்டுமே  என்ன அழகு

வண்ண விளக்குகள்  எங்கும் அன்னதானம்  பார்க்கவே மனம் குளிரும் பலர் கரில் வந்து இறங்கி பின் ஒரு துடைப்பம் கொண்டு கூட்டி பின் துடைப்பார்கள் பெரிய பதவியுடன் இருப்பவர்களும் எல்லோருடனும் சரிசமானமாக   வேலை செய்யும் அழகே அழகு ,,ஆகையால்

அங்கு எப்போதும் சுத்தம் இருக்கும் ,இதை நாம்  நிச்சியம் கற்றுக்கொள்ளவேண்டும் பொங்கலில் இலைகளும்  கிழேவிழ  ஈ மொய்க்க சில கோயில்  பரிதாபகரமாக இருக்கும் 

குருநானக் தல்வண்டியில்  ராவி ந்தி அருகில் லாஹூரில்   மேஹ்தா கலுசந்திற்கும்

திருப்தா என்ற அம்மையாருக்கும்  தவப்புதல்வனாக  அவதரித்தார்  சிறுவயதிலிருந்தே

கடவுள் பக்தி மிக  நிறைந்தவர் 

பல தொழில்களில் தன மகனை    அமர்த்திப் பார்த்தும் ஒன்ரிலும் ஈடுபாடு இல்லாமல் உள்ளே

இருக்கும்  ஒளியை  இறைச்சக்தியை  அடைவதிலேயே அவர் மிகத் தீவிரமாக இருந்தார் 

அவரது மிரகிள் பற்றி   இரண்டு  சமபவங்கள் 

ஒரு சமயம்  அவர் மெக்காவிற்கு போயிருந்தார். களைப்பாக இருந்ததால் கால் நீட்டி  

காபா என்று சொல்லப்படும்  முஸ்லிமின் கடவுள் முன்  கால் நீட்டிப் படுத்துக்கொண்டார் 

அந்த இடத்தில் தான் எல்லோரும் கூடி தொழுவார்கள்   அப்போது அங்கு வந்த கோசி 

ருக்காணுத்தின் {kozi rukanudhin} இதைப் பார்த்து மிக கோபம் கொண்டான்  . “ஏ,,மடையனே 

அறிவு இருக்கா ? கடவுள் பக்கம்  காலை நீட்டிப் படித்திருக்கிறாயே வேறு இடமா இல்லை?

உனககு என்ன தைரியம் இருந்தால்  இப்படி  செய்வாய்?

“ஐயா எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கிறது நீங்களே எந்தப்பக்கம் கடவுள் இல்லையோ

அந்தப் பக்கம்  என் கால்களைத்    திருப்பி விடுங்கள் “

கோசியும்  எதிர்ப்பக்கம் திருப்பி விட்டான்  ,ஆனால் என்ன ஆச்சரியம்  அந்த மசூதியும் அந்தப் பக்கம்  திரும்பியது ,,,,,,அப்படியே அவர் காலின் விழுந்தான்  ருக்காணுத்தீன் 

ஒரு சமயம்   குருநானக்ஜி அட்டாக் தாலுகாவில்  ஹாசன் அப்துல் என்ற இடத்திற்கு { 1520 

ஏ.டி }  போயிருந்தார் மிக ரம்மியமான இடம்  ஒரு சிறு குன்ரின் கீழ் ஒரு அரச்மரத்தடியின் கீழ்  களைப்பாறினார் அந்த இடம்  மிகவும் பிடித்திருந்ததால்  அங்கேயே தன்  சிஷ்யர் மர்தானாவுடன் தங்கி விட்டார் அனால் தண்ணிருக்கு மேலே ஏறிச்சென்று கொண்டு வர

வேண்டி இருந்தது  மேலே ஒரு முஸ்லிம் ஞானி வார குவந்தாரி  என்பர் இருந்து வந்தார்

அவருக்கு குருநானக்ஜி மேல் ஏற்கனவே பொறாமை  ஆகையால் எப்படியாவது இடைஞ்சல்  செய்ய எண்ணி  தண்ணீரை கொடுக்க மறுத்து விட்டார்

மர்தானா இதைத் தன் குருவினிடம் சொல்ல அவர் “கவலைப்படாதே நமக்கு தண்ணீர கிடைக்கும்  என்றார்  மறு நாள்  மேலே இருந்த  நீர்நிலையில்  தண்ணீர் வற்றிவிட்டது

கிழே அனகான ஏரி உண்டாயிற்று  நானக்ஜியின் அருகிலேயே ஓடியது   இதைப் பார்த்த ஞானி ஒரு பெரிய பாறையை   அவர்தலையைக் குறி  பார்த்து   கீழே உருட்டி விட்டான்

அவ்வளவுதான் எல்லாம் அறிந்த குருவிற்கு இது தெரியாதா ?தன் ஒரு உள்ளங்கையினா; கீழே  விழும் தருவாயில் அப்படியே  தடுத்துவிட்டார் இன்றும் அது  ஒரு நுனியில் அப்படியே

கீழே விழாமல்  நிற்பது ஆச்சரியம் தான்  எத்தனைப் புயல்  ,, சுழல் காற்று வந்தாலும் அந்தப்

பாறை அப்படியே நிற்கிரது  தவிர  அந்தப் பாறையில்  அவரது  ஐந்து விரல்களும் பதிந்து இருக்கின்றன  ,  இந்த இடத்தை “பஞ்ஜா சாஹிப் ” என்கின்றனர்  ,

அன்பே கடவுள்  நாமஸ்மரணமே   கடவுள் அருகில்  அழைத்துப் போகும்  மூடந்ம்பிக்கை

இருக்கக்கூடாது மனத்தூமை வேண்டும்  என்று பல கொள்கைகளைப் பரப்பினார் அவர் மகன்ஸ்ரீசந்த  என்பவர்  உதாசிஸ் என்ற குழுவை ஆரம்பித்து  முடி தாடி வைக்க்கும் கொள்கைகளை  ஆரம்பித்து வைத்தவர் அவர் பிறந்த நாளன்று  கரம் கூப்பி சிரம் தாழ்த்தி

வண்ங்குகிறேன்  

வாஹே குரு கால்சா வாஹேகுரு  fஅதே   போலோ சோனிஹால  சத்ஸ்ரீஅகால்

அன்புடன் விசாலம்

Reply Reply to all Forward


காதல்

December 17, 2007

இதய வழி காதல் 

புனிதமான காதல்

ஜாதி தெரிவதில்லை

பேதமும் இல்லை

குண்டு இல்லை

ஒல்லி இல்லை

கறுப்பு இல்லை

வெளுப்பும் இல்லை

இதய ஊற்றில் கிளம்பும்

இதயத்தையே தந்துவிடும்

உயிரைக்கொடுக்க தயங்காது

உடலுக்கு முக்கியம் கொடுக்காது

இவைகள் இல்லாக் காதல்

வெறும் ஏமாற்றும் மோதல்

காதல் என்ற பிதற்றல்

தேவை இதற்கு மறுத்தல்

இதயத்துடன் இதயம் கலக்க

காதலில் இனிமைப் பிறக்கும் 

அன்புடன் விசாலம்


குறும்பன்

December 17, 2007

“எனக்குள் ஒருவன்  புகுந்து கொண்டான் 

அவன் தான் குறுமபன் என்பவனோ ?

காதல் செய்யத் தூண்டுகிறான்

பார்க்கும் பெண்களைச்  சீண்டுகிறான்

அடிகடி “ஜொள்ளு” வழிகிறான்,

எல்லோரையும் “ஐஸ்வர்யா” என்கிறான் 

தொட்டுப்பார்க்கத் துடிகிறான் 

எப்போதும் கனவில் மிதக்கிறான் 

தப்புத் தப்பாய்  பேசுகிறான் 

“ஏ ! குறும்பா நீ யார் என்றேன் ,,,,

வயசு வந்துடுத்து உனக்கு 

பதினாறு தாண்ட வந்துவிட்டேன் 

காமத்துடன்   குறும்பனாவேன் “என்கிறான் 

அன்புடன் விசாலம்  

Reply

சொல்வதொன்று செய்வதொன்று

December 17, 2007

முன்னுரை  ,,,பகவான் சாயி தன் பள்ளி நாட்களை உரவக்கோண்டா என்ற இடத்தில் கழித்தார்

அப்போது பள்ளிக்காக  அவரே ஒரு கதை எழுதி  அதை நாடகமாக்கி முக்கிய பாகத்தில் நடித்தார் நாம் வாழ்க்கையில் முக்கியமாகக் கடைப் பிடிக்க வேண்டியது கதையின் தலைப்பு

சொலவது ஒன்று  செய்வது ஒன்று” என்று நான் கொடுத்துள்ளேன்,அந்தக்கதையை ஒரு நாடகமாக்கி எழுதியுள்ளேன் ,,,,சாயிராம்,,,, 

முதல் காட்சி,,,,,,ஒரு  ஹால் அதில் பல பெண்மணிகள் அமர்ந்திருக்கின்றனர் ஒரு பெண்மணி

ஒலிபெருக்கில் ஸ்ரீ மஹாபாகவத்திலிருந்து ஒரு காட்சியைப் பற்றி பேசுகிறாள்

பாத்திரங்கள்  {கிருஷணன் ,அவன் தாயார்  லலிதா  ,பல பெண்மணிகள்  ஒரு கண்ணில்லாதவன்

ஒரு சன்யாசி தன் சிஷ்யனுடன்}

பெண்மணி ,,,”அன்பர்களே  தானம் அவசியம் நீங்கள் செய்ய வேண்டும் கொடை வள்ளல் 

கர்ணனைப் பாருங்கள் சாகும் நிலையிலும் தன் குண்டலத்தைக் யாசிக்க வந்த  பிராமண்ருக்குக்

கொடுத்து விட்டான் ,கூடிய வரை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள் ஆனால் நல்ல கட்டு

மஸ்தான உடம்புடன் கூடிய சோமேபேறிகளாகத்  திரிபவர்களுக்கு காசு கொடுத்து

கெடுக்காதீரகள் ஊனமுற்றோருக்கும் வயதானவருக்கும் மனம்  விட்டு  தானம் செய்யுங்கள்.இன்றே

தானம் செய்ய பிரமாணம் எடுத்துக் கொள்வோம் ,என்ன தயாரா?

எல்லோரும் ,,,,,,,,,,,,”தயார்  ,,,,,,,,,இன்றே ஆரம்பிக்கிறோம் “,

காட்சி மாறல் ஒரு கண்ணில்லாத வயதானவர்  வருகை.,கை நீட்டி யாசிக்கிறார்  .பேசினவளின் காலைத்

தொடுகிறார் ,அந்தப் பெண்மணி  முகம் சுளிக்கிறாள் ஒரு ஓரமாக நகருகிறாள்

பெண்மணி ,,,”போ போ ,,,ஒன்றுமில்லை  ,,,இதே தொல்லயாய் போச்சு “

  ஒரு ஹரிதாஸ் காவி வஸ்திரத்துடன்  சந்தனங்கள் அப்பி  பஜன் பாடிக்கொண்டு அவளிடம்

வருகிறார்,,கைகளைத் தூக்கி ஆசீர்வதிக்கிறார்

ஹரிதாஸ்,,,,,,”தீர்க்க சுமங்கலி பவ ,,,,

பெண்மணி,,,,,,,   “என்ன அருமையான் பஜன்  எவ்வள்வு மனச்சாந்தியைக் கொடுக்கிறது”

                               இருங்கள் ,,,,,

தன் கைப்பையைத்திற்ந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு எடுக்கிறாள்

                           

“இந்தாருங்கள் என்னை ஆசீர்வதியுங்கள் ,”

கீழே விழுந்து நம்ஸ்கரிக்கிறாள் ,,,,,,

அவள் மகன் கிருஷ்ணன் கூடவே இவைகளைப் பார்க்கிறான்

கிருஷ்ணன்  ,,,,” அம்மா….என் செல்ல அம்மா ,,,,

பெண்மணி  “என்னடா கண்ணா  என் பேச்சு எப்படி இருந்தது?கேட்டாயா?

கிருஷ்ணன்    ,,,,” கேட்டேனே பாகவதக்க்தையின்  போது  என்ன பேசினீர்கள்?

இப்போது என்ன செய்தீர்கள்?சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?அந்தக் கண் இல்லாதவனுக்கு ஒன்றுமில்லை என்றுச் சொல்லிவிட்டு இந்தச் சாமியாருக்கு நூறா?

பெண்மணி,,,,,,,,”சீ அதிகப் பிரசங்கி,,வாயைப் பொத்து ,நீ சின்னப்பிள்ளை இதற்கும் உனக்கும்

சம்பந்தமில்லை சொல்வதை யாராவது செய்கிறார்களா? போ போ உன்  வேலையைப் பார்”

காட்சி இரண்டு ,{,பாத்திரங்கள் கிருஷ்ணா ,,கிருஷ்ணாவின் தந்தை நாராயணன் ஒரு ஏழைப்பையன் ராமு,   ஒரு காலேஜின் ஐந்து மாணவர்கள் }

 காட்சி  ,,காரியாலயத்தில் ஒரு ஹால்.  அப்பா கல்வியைப் பற்றி பேசுகிறார்

நாராயணன் ,,,,,,” கல்வி எல்லோருக்கும் ரொம்ப முக்கியம் ,கல்வி நம் கண் போன்றது

திருவள்ளுவர் சொல்லுகிறார் “உளரென்னும்   மாத்திரையர்   அல்லால் பயவாக்

களரனைவர் கல்லாதார்”

உவர் நிலம் ஒன்றுக்கும் உதவாது விளையாத உவர் நிலம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை

அதேபோல் கல்லாதவர் உயிரோடு இருப்பதால்  ஒருவருக்கும் பிரயோசன்மில்லை

அவரால் பயனில்லை என்கிறார் வள்ளுவபெருமான் ,,,ஆகையால் இளைஞர்களே

மாணவர்களே பல தடைகள் வந்தாலும்  மனச்சக்தியினால்  படிப்பை முடிக்க வேண்டும்

கல்விக்கு அளவே கிடையாது ,படித்துக்கொண்டே போகலாம் ,,,,,யாருக்காவது எதாவது

கேட்க வேண்டுமா?

வாசலிலிருந்து ஏழை ராமு நுழைகிறான் ,,

ராமு ..”ஸார் ரொம்ப நன்றி எத்தனை அழகாக கல்வியின் சிற்ப்பைக் கூறினீர்கள் எனக்கு

படிக்க ஆசை இருந்தும்  வசதி  இல்லை கல்வி பெற ஏங்குகிறேன் “

நாராயணன ,,,,” அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

ராமு ,,,”உங்களைப்  போல் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர் தான் எனக்கு உதவ முடியும்

என் பள்ளி பீஸ் க்ட்ட முடியவில்லைஇந்த மாதம்  ஒரு சில ரூபாய் குறைகிறது ,தயவு

செய்து  உதவுங்கள்”

நாராயணன் ,,,,,,ஒ,,,ச்ச்சு ,,,,மறந்தே போச்சு ,,,என் பர்ஸ் காலி ,,,,,,”{தன் காலி பர்ஸைத்

திறந்து காட்டுகிறார் .}”என்னிடம் ஒரு பைசா கூட இல்லையே,,,,,”

ராமு சோக்மாக வெளியே போகிறான்,

ஐந்து காலேஜ் மாணவர்கள் த்பதப என நுழைகிறார்கள் ,,,,

மாணவத்தலைவன் ,,,,,,,”ஸார் ,ஒரு சின்ன உதவி  எங்கள் ஏரியாவில்  ஒரு புது

இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார் அவருக்கு ஒரு சின்ன பார்டி வைக்கப் போகிறோம்

நீங்கள் அவசியம் வந்து கௌரவப்படுத்தவேண்டும்”

நாராயணன  {முகம் மலர }  “ அவசியம் வரேன் ,,,நீங்கள் அழைத்து நான் வராமலா ,,”

தலைவன் ” இன்னொரு வேண்டுகோள் நாங்க்ள் பார்ட்டிக்கு  பணம் கலெக்ட் செய்கிறோம் கொஞ்சம்

ஏதாவது,,,,,,,,,,,நீங்கள்,,,,,,,டொனேஷன் ,,,,,,,”

“அதற்கென்ன? இதற்கில்லாமலா?  “{இடுப்பில் இருக்கும் பர்ஸைத் திறந்து ஐநூறு ரூபாயைக்

கொடுக்கிறார்}

மாணவர்கள் ,,,,,,”தேன்க் யூ  சார் “,,,,,,,

}
கிருஷ்ணன் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான் ,

கிருஷ்ணா,,,”அப்பா அப்பா ,,,,

நாராயணன் ,,,,”என்ன கிருஷ்ணா?”

கிருஷ்ணா ,,,பெரிய லக்சர் கலவியைப் பற்றிக் கொடுத்தீர்கள்,,ஆனால் பாவம் அந்த

ஏழைப்பையன் ராமுவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கலயே ,,,,,ஏன் காலி பர்ஸைக்

காட்டினீர்கள் ,உள்ளே வேறு பர்ஸில் நிறைய ரூபாய்கள் இருந்ததே,”

நாராயணன் {முகம் மாற}”உனக்கென்ன அதைப்பத்தி இப்போ?”

 கிருஷ்ணா  ,,,,,,”பொய் சொல்லலாமா?அப்பா ,,,அந்தக் காலேஜ் மாணவனுக்கு மட்டும் பணம்

கொடுத்தீர்களே ,,,,

நாராயணா ,,,,சின்னப்பிள்ளயாக லட்சணமா சும்மா இரு “

கிருஷ்ணா ,,,’ஏம்பா  பார்டிக்கு பைசா வேஸ்ட் செய்வதை விட அந்த ஏழைப்பையனுக்கு

ரூபாய் கொடுத்திருக்கலாமே,,”

நாராயணன் ,,,,,”நிறுத்தறயா  ,சும்மா தொண தொணன்னு ,,,சொலவதை யாராவது செய்கிறார்களா?

காட்சி மூன்று ,,,,,பாத்திரங்கள்,,,ஆசிரியர்  சில மாணவர்கள் ,,கிருஷ்ணா

காட்சி  பள்ளி அறை ,,,ஐந்தாம் வகுப்பு ,ஒருமேஜை ,,ஒரு நாற்காலி ,,,மற்ற பெஞ்சுகள், 

ஆசிரியர் நுழைகிறார்.

ஆசிரியர் ,,,,,,குழந்தைகளே  இன்று ஒரு இன்ஸ்பெகடர் திடீர் விஜயம் செய்யப் போகிறார்,

                  அவர் உங்களை எத்தனைப் பாடம் நான் நடத்திருக்கிறேன் என்று கேட்டால்

                  33 பாடங்கள் என்று சொல்லுங்கள் சரியா?

மாணவர்கள்,,,,சரி  சார் ,,,

{கிருஷ்ணன் வாயைத் திறக்கவே இல்லை }

ஆசிரியர் ,,,,,,நான் இப்போது 33 வது பாடம் ஸ்ரீ ஹரிச்சந்திரா நடத்துகிறேன் ,அந்த

இன்ஸ்பெக்டர் வந்ததும் திரும்பவும் இதையே புதிதாக நடத்துவது போல்  பாவனைச்

  செய்து   திரும்பவும் நடத்துகிறேன் இப்போது என்ன கேள்விகள் கேட்கிறேனோ

அதையே திரும்பவும் கேட்பேன் ,புதிதாக பதில் சொல்வது போல்  சொல்லுங்கள்

நீங்கள்   “டக்கு டகென்று “பதில் சொல்ல  அவரும் உங்கள் திறமையில் மயங்கி விடுவார்.

சரியா ?

மாணவர்கள்  ,,”, நல்ல ஐடியா  சார் ”

கிருஷ்ணா ,,,,”,,இது சரியில்லை ”

ஆசிரியர் ,,”,நீ சும்மா இரு  அதுவே போதும் ‘

“டண் டண் டண் டண்”  லஞ்ச் பெல்   அடித்தது    ,,,, 

கிருஷ்ணா மெள்ள ஆசிரியரிடம்  போகிறான் ,

கிருஷ்ணா    ,,,,,ஸார்,,,இன்று நீங்கள் ஹரிச்சந்திரா பாடம் எடுத்தீர்கள் இல்லையா?

ஆசிரியர் ,,,,,,,ஆமாம் அதில் என்ன  சந்தேகம் உனக்கு ?

கிருஷ்ணா ,,,எனக்கு சந்தேகம் ஒன்றும் இல்லை  ஆனால் பொய்யே பேசாமல் பல கஷ்டங்கள் பட்ட ஹரிசந்திரன்  கதை எடுத்து எங்களைப் பொய் சொல்லச்

சொன்னீர்களே இது முறையா ஸார் ?இது தவறு இல்லையா?

ஆசிரியரின் முகம் கோபத்தால் மாறுகிறது ,

ஆசிரியர்  ,,”,ஆரம்பிச்சுட்டயா ,,,,,,,,யாராவது  சொல்வதைச் செய்கிறார்களா? போ உன் வேலையைப் பார் ,,,முட்டாள்,,,,,”

காட்சி 4  வீடு ,,முன் அறை ,,,,,,இரண்டு  நாற்காலிகள்   ,ஒரு டேபிள் ,

பாத்திரங்கள்:  கிருஷ்ணன்  பெற்றோர்கள் திரு நாராயணன் ,திருமதி  லலிதா

கிருஷ்ணன்  பள்ளியிலிருந்து வேகமாக வந்து தன் பள்ளியின் பையை வேகமாக்

டேபலில் வீசுகிறான் 

கிருஷ்ணா ,,,அப்பா  நான்  பள்ளிப் போகமாட்டேன் ,,,

நாராயணன்  ,,ஏன்  கிருஷ்ணா  என்ன நடந்தது ?

கிருஷ்ணா ,,எல்லோரும் நன்றாக லெக்சர்  கொடுக்கிறீர்கள் ,அறிவுறை வழங்குகிறீர்கள்

                    ஆனால் அதுபோல் ஒருவரும் நடப்பதில்லை ஸார் ஹரிச்ந்திரா நடத்தி

                  பொய் பேச  சொல்லுகிறார்  நிங்களும் அப்படியே சொலவது ஒன்று

                  செய்வது ஒன்று என்று  இருக்கிறீர்கள்   நீங்கள் சொல்வது போல் நாங்கள்

நடக்க உதவுவதில்லை.  இப்படிப்பட்ட படிப்பு தேவையா? பெரியவர்கள் உதாரணமாக

இருக்க வேண்டாமா?அம்மா ஒன்று சொல்கிறர் .வேறு செய்கிறார் ,நீங்ளும் அப்படித்தான்

அப்பா ,,நான் குழம்பி போகிறேன் ,,,,,இதுவா கல்வி,,,,,,,,,,

அப்பா அம்மா முகத்தில் ஈயாடவில்லை பிரமித்து நிக்க திரை போடப்படுகிறது  ,,,,,,

அன்புடன் விசாலம்


 

Reply Forward

கவிதை ஒரு கப்பலானது

December 17, 2007

பிறந்தேன் பெண்ணாக ,,

செல்லமாக வளர்ந்தேன்

பெற்றோர்களின் ஆதரவு

கற்றுகொண்டேன் பணிவு

ஆவலுடன் படைத்தக் கவிதை 

முதல்  பரிசு பெற்றது ,

மேலும் எழுதத் தூண்டியது 

நூறு கவிதைகள் ஆனது 

ஊக்கத்தில் மேலே ஏற 

பரிசுகளும் குவிந்தன.

பெற்றோர்களுக்குப் பெருமை

புகழந்தனர் சிலர் அருமை

திருமண வேலி மாட்டியது

என் சுதந்திரமும் போனது

சினமே கொண்ட குணவான்

வியாபாரமே கணவனானான்

என் உணர்வுகளுக்கு அங்கு இடமில்லை 

கலைகளுக்கும் அங்கு இடமில்லை 

சமையல் அறையில் இடமுண்டு 

அன்புடன் படைக்க மனமுண்டு 

அருமைப் பெண் வந்தாள்

கப்பல் செய்யத் தாள் கேட்டாள்.

கிழித்தான் என் கவிதைகளை ,

செய்துக் கொடுத்தான்  கப்பலை

வெள்ளிப் பரிசுக்கள் கறுத்தன

என்னைப் பார்த்துச் சிரித்தன

என் மகனுக்கு கிரிக்கெட் மட்டை ஆயின

என் மனதைப் போட்டு வறுத்தின

இன்று மனதுக்குள் கவிதை எழுதுகிறேன்

அழிக்க முடியாது கிழிக்க முடியாது

ஆனால் பெற்றோர்களின் ஆசை எங்கே?

கண்களில் கண்ணீர் வடிக்கிறேன் ,

Reply Forward