ஸ்ரீ மஹாவீர் ஜயந்தி

April 21, 2007


ஜைன மதத்தினருக்கு மாஹாவீர் ஜயந்தி ஒரு பெரிய திருவிழாதான்!அவரைப் பற்றி,
பார்க்கும் முன்னர் நாம் அவரின் பிரார்த்தனையில் நாமும் கலந்து கொள்ளலாம் எல்லா மதமும் சம்மதமே! அன்பு, ஒழுக்கம், நற்சிந்தனை, கடமை, உழைப்பு இதிலேயே நாம் அந்த இறைச்சக்தியைப் பெறலாம் இல்லையா?

“நமோ ஹரி ஹந்தாணம்
நமோ ஹரி சித்தாணம்
நமோ ஹரி ஆர்யாணம்
நமோ ஹரி உவஜ்யாணம்
நமோலோ ஸர்வ ஸாஹீமாணம்
பஞ்ச நமக்காரோ சர்வ பாவ பாணாஸனா
பத்மம் ஹாவை மங்களம்”

இதன் அர்த்தம் அந்த இறை சக்தியை வணங்குகிறேன்,
முக்தி நிலையை எய்தியவர்களை வணங்குகிறேன்,
பெரிய மதத் தலவர்களை வணங்குகிறேன் ,
நல்லாசிரியர்களை வணங்குகிறேன்,
நல்ல மேலோர்களை வணங்குகிறேன். இந்த பஞ்ச நம்ஸ்காரங்களைச் செய்தால், வாழ்க்கையில் மங்களம் உண்டாகும், மகிழ்ச்சி பெருகும்.
ஸ்ரீ மஹாவீரரின் தந்தை திரு.சித்தார்த்த் என்பவர் அரசர், அவர் தாய் திரிசலா அல்லது பிரியகர்னி, இந்தத் தாய் மஹாவீரரைப் பெற்று எடுக்கும் முன் 14 பொருட்களைத்
தன் கனவில் கண்டாள். அவை…சிங்கம், யானை, வெள்ளிதட்டு, தாமரைக்குளம், காளை, லட்சம் பாற்குடம், காற்றில் தெய்வீகச்சக்தி, இரண்டு மலர்மாலைகள், சந்திரன், சூரியன், புகையாத அக்னி, கொடி, அபிஷேகப்பால், அரிசி.
இதைப் பற்றி பல பெரியவர்களிடம் கேடக அவர்கள் சக்கரவர்த்திப் போல், ஒரு ஒளி பொருந்திய மகன் பிறப்பான் என்றனர்.
மகனும் பிறந்தான் ஆனால் ஸ்ரீ புத்தரைப் போல் அரசக்குடும்பத்தில் பிறந்திருந்தும் தனது முப்பதாவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி ஆசைகளை அடக்குவதில் வெற்றியும் கண்டார்,பல இடங்கள் காலில் செருப்பு இல்லாமலே நடந்து பின் அந்த இறை சக்தியைக் கண்டு கொண்டார். உண்மைப் பேசுதல், திருடாமல் இருத்தல், பால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்தல் எனபதை மிக முக்கியமான கொள்கையாக வலியுறுத்தினார். முற்பிறவியின் கர்மவினையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. கோபம் பேராசை இன்னாசொல், கெட்ட எண்ணங்கள் முத்லியவை பாபங்களை மேலும் பெருக்க உதவுகின்றன என்றும் உபதேசித்தார்.
இந்த ஜைன மதம் ஜினா என்பவர்களின் மூலம் ஆரம்பமாகியது இவர்களே பின்னால் ஜைன் என்று அழைக்கப்பட்டனர். “ஸ்வேவாதமபரா”,”தீர்த்தங்கரா” என்று இதில் இரண்டு பிரிவுகள்,
ஸ்ரீ மஹாவீரரின் குரு ஸ்ரீ பார்ஸ்வநாத் என்பவர் தீத்தங்கராவைச் சேர்ந்தவர்.
இவர்கள் உள்ளே நிலைத்திருக்கும் ‘நான்’ என்பதை ஒழித்து கோபம், பேராசை, அஞ்ஞானம், அஹங்காரம் இவற்றை ஒழிக்க உபதேசம் செய்பவர்கள். மிகவும் பழைய ஜைன் கோவில்கள் குஜராத்தில் கிரினா பலிதானாவிலும், ராஜஸ்தானில் மஹாவீர்பி என்ற இடத்திலும் காணலாம்.

இந்த ‘மஹாவீர் ஜயந்தி’ அன்று தேர் இழுக்க, அதில் இந்த மஹாவீரர் எழுந்தருளி வலம் வருவார். அன்னதானம், கல்விதானம் போன்ற பலவிதமான சிறப்பு தானங்கள் நடக்க, பெரிய திருவிழாக் கோலம் காணக் கண்கோடி வேண்டும்! அந்த மஹா புருஷருக்கு, தலை குனிந்து வணங்குகிறேன்!

அன்புடன் விசாலம்


அம்மா …..என்று நீ என்னை அணைப்பாய் ?

April 21, 2007

அம்மா  என்று  என்னை அணைப்பாய்  நீ ,

என் மழலை மொழிகளைக் கேட்பாய் நீ

அம்புலி மாமா காட்டி

பப்பூ மம்மூ  ஊட்டுவாய் ?

ஒரு  எட்டு மணி அடிக்க

கொண்டு போடுகிறாய் காப்பகத்தில் ,

அங்கு அன்பில்லாமல் ஒரு தூக்கம்

ஒரு  தாலட்டு பாட்டிற்கு   ஏக்கம்

உன்னைவிட்டுப் பிரிந்த துக்கம்

மனதில்  நுழையும்  ஒரு  தாக்கம் ,

திரும்பி வருகிறாய் அலுப்புடன்

வீசுகிறாய் கைப்பயை சலிப்புடன்

அப்பாவுடன் சண்டை வலுவுடன்

பார்க்கிறேன் மனக் கசப்புடன்

கூச்சல்  ஏற கையும் ஓங்க

பயந்து நிற்கிறேன் ஒரு கோடியில்

வாயடைத்துப் போகிறேன் மாடியில் .

பாட்டி தாத்தா வேணுமம்மா,,

அவர்கள் அன்பில் பிணைவேன் அம்மா 

அன்புடன் விசாலம்

Reply

லோகாபிராமம் ஸ்ரீராமம்

April 21, 2007

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவன்  பார்வதியிடம் சொலுகிறார் ,

ராம ராம் ரமேதி ரமே ராமே மனோரமே

சஹஸ்ரநாம த்த்துல்யம் ராமநாம  வரானனே 

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு சமமானது ராம் நாமம்  நான் எப்போதும் ராம் ராம் ராம் என்ற மனோரமான ராம நாமத்தைச் சொல்கிறேன்   ,,,,,

இதிலிருந்தே தெரிகிறது ஸ்ரீ ராம நாமம்  சொல்லக் கோடி

நனமை என்று,,,,ஸ்ரீராமரிடம் நாம் பல நல்ல விஷ்யங்களைக் கற்றுக் கொள்ளலாம்

தாய் தந்தை  சகோதர்கள்  உறவினர்கள் மனைவி ,

குடிமக்கள் எல்லோரிடமும் அசாதாரணமான  ஆதர்ச

புருஷராக இருந்தார் இதைக் கைகேயீ    முத்ன் முதலில்

மந்தாரையின் சூழ்ச்சியில் விழாத போது   சொல்லுகிறாள்

“தர்மக்ஞோ   குணவான்  ததந்த  கிருதஜ்ஞ  ஸதயவாஞ்சு சி

ராமோ ராஜஸுதோ ஜ்யேஷ்டோ யௌவராஜமதோர்ஹதி

“மந்தாரையே  ஸ்ரீராமன்  தர்மம்  தெரிந்தவன்   நற்குணம்

பொருந்தியவன்  சத்தியம் பேசுபவன் புலன்களை 

வென்றவன்   மூத்த மகன் செய்நன்றி மிக்கவன் ,

பரிசுத்தமானவன்  ஆகவே அவனே இளவரசன் ஆக 

முழு தகுதி  உள்ளவன் “

2தாய் பகதி  ,,,,தன் தாய் கைகேயி தன்னைக்  காட்டிற்கு அனுப்ப தயை இல்லாமல் செய்கை செய்த போதிலும் 

அவ்ர் மேல் மிக பக்தியுடன் ,பணிவுடன்  நடந்து கொண்டார் அவர் இலக்குவனிடம் கூறுகிறார் 

யஸ்யா மத பிஷேகார்த்தே   மாநஸம்   பரிதவ்யதே 

மாதா ந: ஸா யத  ந ஸ்யாத்   ஸவிஸங்கா   ததா  குரு ,

ல்க்ஷ்மணா  என்னுடைய் முடி சூடு விழா காரணமாக  யாருடைய 

மனம் வருத்ததில்  கொதிக்கிறதோ அந்தத் தாய்க்கு

என்மேல் ஒரு ஸந்தேகமும்  வராமல் பார்த்துக் கொள் 

அவர் துக்கத்தை என்னால் பார்க்க இயலாது தாள 

முடியாது   “

3 தந்தை பகதி    

தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில்ஸ்ரீ ராமனிடம் 

மிகவும்  பக்தியும் துணிவும்  சிரத்தையும் இருந்தது 

“அஹம்    ஹி வசனாத்   ராஜ்ஞ:  பதேயமபி  பாவகே 

பக்ஷ்யேயம் விஷம்   தீக்ஷணம்   பதேயமபி  சார்ணவே 

என் தந்தை  மன்னர்  சொன்னால் நான் நெருப்பில் கூட குதிப்பேன்

கடும் விஷம் உண்பேன்  கடலிலும் விழுவேன்  ஏனென்றால்  தந்தைக்கு  பணிவிடை செய்வதை விட வேறு தர்மம் உலகில் இல்லை தவிர  அவர் கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை  ,தர்மம்”

4ஏக பத்னி விரதம்   ,,,,சீதா தேவியை  வனத்திற்கு அனுப்பியவுடன் ஒரு யாகத்திற்கு மனைவி இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்தவுடன்  அவளைப்

போல் தங்கப் பதுமைச் செய்து  வேள்வியைச்  செய்து

முடித்தார்  அதற்கென்று  வேறு திருமணம்  செய்து 

கொள்ளவில்லை  

5 சகோதர பாசம்

ராமனுக்கு  எலா சகோதரருடன் சமமாக அன்பு  இருந்தது

திருமணமும் எல்லா சகோதர்களுக்கும் ஒன்றாகவே

நிகழ்ந்தது

ஸ்ரீ ராம பாட்டாபிஷேகம் நாள் பொருத்தியவுடன்

அவர் தம்பி இலக்குவனிடம்  சொல்கிறார்

” லக்ஷ்மணேமாம்  மயா   ஸார்த்தம் ப்ர்ஸாதி  த்வம் 

வஸுந்தராம்

திவிதீயம்   மோந்தராத்மானம்   த்வாமியம்  ஸ்ரீருபஸ்திதா

“அன்பு இலக்ஷ்மணா  நீ என்னுடன்  இருந்து  இந்தப்பூமியை

ஆண்டு உதவுவாயாக் நீ என்னுடைய மற்றொரு  அந்தராத்மா  ,,,,,,,,,

பின் பரத சத்ருக்னரைப் பற்றிஅன்னைக் கோசலையிடம்

தான் விடைப்பெற்றுச் செல்லும் நேரம் கூறுகிறார்

“பிராத்ரு புத்ரஸமௌட்ரஷ்டவ்யௌச  விஷேத:

த்வ்யா  பரத் சத்ருக்னௌ பிராணை: பிரயத்ரௌ  மம 

” பரத்னும் சத்ருக்னனும் என் உயிரை விட என்க்கு

மிகப் பிரியமானவர்கள் அவர்களை ஹே சீதே உன் புதல்வர்களைப்போல்  சகோதர்களைப்போலன்பு செலுத்த

வேண்டும்   “

6  நட்பு   ,,,,,ஸ்ரீ ராமன் தன் நண்பர்களிடம் கொண்ட

நட்பிற்கு  அளவேஇல்லை குஹன்.   கானகவாசி வானரங்கள் ஜடாயூ  போன்றவ்ர்களிடம்  அவர் செலுத்திய

அன்பு மிகவும் உயர்ந்தது

“ஸுஹ்ருதோ  மே  பவந்தஸ்ச  சரிரம்  ப்ராதரஸ்ததா

யுஷ்மாபிர்ய்த்ருதஸ்சாஹம் வ்யஸ்நாத்காநநௌகஸ:

தந்யோ  ராஜா ச் ஸுக்ரீவொ பவத் பி:ஸுஹ்ருதம்வரை

கானக வாசிகளே  வானரவீரர்களே  நீங்கள் என் உடன் பிறந்தவர்கள் ,நண்பர்கள்  என் உடல் நீங்கள் என்னைக்

கஷ்டத்திலிருந்து விடுத்தீர்கள் ராஜா  சுக்கிரீவன் ந்ல்ல

நண்பர்களைப் பெற்ற பாக்கியசாலி ”என்று

புகழுகிறார்  ,,,

7 தஞ்சம்  அடைந்தவரைக் காப்பாற்றுதல் 

 விபீஷணர்  இராவணனனைவிட்டு ஒடி வந்து  ஸ்ரீரமனைத்

தஞ்சம் அடைந்தபோது பலர் அவரைசேர்த்துக் கொள்ளத்

தடுக்கின்றனர்

ராமர் சொல்கிறார் 

“மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம்     கதஞ்சன”

தே ரக்ஷோ யத் யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததகர்ஹிதம் “

நட்பு உணர்ச்சியால் என்னிடம் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் விபீஷணனை என்னால் தள்ளமுடியாதுஅவனிடம் எக்குற்றம் இருப்பினும் அவனுக்கு ஆதரவு தருவது தான் நல்லது”   என்கிறார்

இதே போல் செய்நன்றி அறிதல்  குடிமக்களைத் தன் மக்கள்போல் பாவித்து நனமி செய்தல் ,மன்னிக்கும்

குணம் என்று அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே

போகலாம் 

ராமாய  ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே

ரகுநாதாய  நாதய  சீதாய பதயே  நம:,,,

ஸ்ரீ ராமருக்கே இதை அர்ப்பணிக்கிறேன்

அன்புடன் விசாலம்

  :

   


என் நினைவில் திருமதி முக்தாம்மா

April 21, 2007

பதம்  ஜாவளி என்ற பெயர் சொன்னாலே திருமதி  பிருந்தா , திருமதி முகதா  அவர்களை

நினைக்காமல் இருக்க முடியாது  வீணை தனம்மாள் பெற்றெடுத்த மாணிக்கங்க்ள்,

ஸ்ரீமதி பிருந்தா ,ஸ்ரீமதி முகதா ஸ்ரீமதி பாலஸரஸ்வதி ,, திருமதி பால ஸரஸ்வதி பரத நாட்டியத்தில் பெரிய இடத்தைப் பிடித்தவர்  இவர்களில் எஞ்சி நின்ற முக்தாஅம்மாவும் 

போன   வாரம்    காலமானார்  , பதம்   ஜாவளி பாடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான் 

இவர்களை மும்பையில்   திருமதி  ராஜலட்சுமி {திருமதி அருணா சாயிராமின்  தாய்}

வீட்டில்   பார்க்கும்   வாய்ப்பு  ஏற்பட்டது     முக்தாம்மா பதம்  சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் ,நானும் அதை ஆனந்தமாகக் கேட்டேன் .இவர் பதம் பாடினால் மிகவும்

கணீர் என்று இருக்கும்  ஆனால் இந்த அவசர யுகத்திற்கு அவரது பாட்டு ஒத்துக்

கொள்வதில்லை ஏன் என்றால் அவரது பாட்டு   நெஞ்சின் உள்ளிலிருந்து ஆழமாக கிள்ம்பி

மிக்வும் மெதுவாக அனுபவித்து அந்த பாட்டின் கடவுளை எதிரே கொண்டு வந்து

நிருத்தி விடுவார் அவர் பாடிய சில பாடல்கள்  “ஜானகி ரமண,,,,மாமவ பட்டாபி ராமா ,,

இன்னும் என் காதில்  ஒலிக்கிறது அவரது ஜாவளி”  மருபாரி” மறக்க முடியவில்லை கர்நாடக

சங்கீதப்  பிரியரகளுக்கு அவ்ர் என்றும் நீங்காத நினைவாக இருப்பார்கள் என்பது  திண்ணம்

முக்தா அம்மவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்   அன்புடன்  விசாலம்

Reply

ஸ்ரீ அரவிந்தரின் “சாவித்திரி”

April 21, 2007

ஸ்ரீ அரவிந்தரின் ” சாவித்திரி  ” ஒரு பொக்கிஷம்  விலை மதிப்பில்லாத ஒரு படைப்பு இந்தக் காவியத்தைப் படித்தால் பாமர மக்களுக்கு ஒன்றும் புரிவதில்லல மிகவும்  கடினமான் ஆங்கிலத்தில் உள்ளது ஆனால் இதப் படிக்க படிக்க தானகவே மனம் தெளிவாவதைக்

காண்கிறோம் இதை வீட்டில் வைத்துக் கொண்டிருந்தாலே போதுமானது ,பலப் பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும் வீட்டில் சுபீட்சம்  உண்டாகும்  ,, என்க்கு தெரிந்த ஒருவர் திடீரென்று ரத்தக் கொதிப்பு அதிகமாகி அவர் ஆபீஸில் ஒரு பக்கம் கை கால் இழுத்துவிட்ட நிலை..அவரால் வாயால் பேசவும் முடியவில்லை  அவரை நர்சிங் ஹோம் அழைத்து

போனார்கள் ,அங்கு டாக்டர்கள் அவரைப் பரிசீலனம் செய்து குறைந்தது ஒரு 6 மாதம் ஆகும்

ஒரு சுமார் நிலமைக்கு வர என்றனர் ,,அவர் அன்னையின் பக்தர் ,ஒரு நான்கு நாடகள்

ஆனதும்  அவர் தன் மனைவியை சாவித்திரி புத்தகம்  கொண்டுவரச் சொன்னார். அன்னயிடம் வேண்டினார்  “,நான் என்னால் முடிந்தவரை  சாவித்திரியிலிருந்து சில சொற்களாவது எழுதுவேன் ,அதற்கு நீதான் வலிமைத் தரவேண்டும் உனக்கே சமர்ப்பணம் “என்றார்முதலில்

ஒரு தாளில் கட்ட் விரல் கூடப் பிடிக்க முடியாத நிலை .முதல் எழுத்தே  ஒரு கிறுக்கலாக

வந்து ஒரு வயது பாப்பா கிறுக்கலாக இருந்தது பின் கண்ணீர் விட்டு அன்னையப்

பிரார்த்தித்தார் ,அன்று இரவு  அன்னை வெள்ளை உடையில்  கட்டில் அருகில் அமரக் கண்டார், அன்னையின் கை இவரின் கைகளைதடவியது போல்  இருந்தது  பின்  ஒரு

நிமிடத்திற்குஒரு பேறொளி தெரிய பின் மறைந்தது ,,மறு நாள் காலை  ..திரும்ப அவர் எழுத  நினைத்து பேனாவைக் கையில் பிடிக்க ஒரு சொல் அவரால் எழுத முடிந்தது

இதே போல் அவர் தொடர்ந்து ஒருபத்து நாடகள் செய்ய ,,,15 வது நாள் டாக்டர் வந்து

பார்த்து இது நிச்சியம் ஒரு தெயவ் சக்தி தான் ,நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி அவரை டிஸ்சார்ஜும் செய்து விட்டார்  அவ்ர் அன்னையின் ஒரு  பிறந்த நாள்

 அன்று இந்தச் சாவித்திரியின் காவியத்தின்  சக்தியைப் பற்றி பேசினார் ,,,,,,,,,,,,

ஸ்ரீ அரவிந்தர் “சத்தியவான் சாவித்திரி  கதையை ஒரு வேத ரகசியம் பொதிந்தக் கதையாக்

உணர்ந்தார் அவரின்  கணிப்பில் “ஜீவனின்  ஆன்மீக சதியம் தாங்கி வரும் ஆனமா”

என்கிறார்,தூமத்சேனா  சத்யவானின் தந்தை  பார்வை இழந்தவர் அதன் காரணமாக 

இராஜ்ஜியத்தையும் இழந்தவர் ,,அதாவது  உடல் ஒளிஅயை இழந்தால்வரிசையாக 

எல்லாத் தனமைகளையும் இழக்கிறது அதாவது  உள்ளிருக்கும்  ஒளியைப் புரிந்து

கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது பார்வை இழந்தது என்பது  நமது அக்ஞானம் என்று

சொல்லலாம்,

அஸ்வபதி சாவித்திரியின் த்கப்பனார் ,,அவர்தான்  தவத்தின் சக்தி ,,ஆன்மீகக் கனலாக எழுந்து

பல சாதனைகள் புரிகிறது    அர்விந்தர் கண்ணில் பூலோகமும் சொர்க்கலோகமும் ஒன்றே

பூலோகத்திலிருந்தே சொர்க்கலோகத்தை உண்டு செய்யலாம் என்கிறறர் அவர் 

ஸ்ரீ அர்விந்தரின் சாவித்திரி  ஒளியின் தெயவம் ,காலனை இருளின் தெயவமாகச்

சித்திரிக்கிறார்,இவர்களின் உரையாடல் 100 பக்கங்களுக்கு மேல் 3 புத்தகங்கள் கொண்டது,

இங்கு சாவித்திரி வரன் கேட்காமல் அந்தக் காலனையே ஒழித்து காரிருளை அழித்து

உலகத்துக்கு பேரொளி காட்டுகிறாள் அதாவது அக்ஞானத்தை வென்றது ,,,

மனிதன் உயர்ந்த வாழ்க்கை எட்ட சத்ய ஜீவியத்தை அடையவேண்டும் காலன் என்ற

இருள் அழிய “கேள்..கேள் ,,,கேள் ,,கேள் ” என்ற அசரீரி வர  அன்னை சாந்தம்  ஒருமை,,சக்தி  சந்தோஷம் ,,

தனக்கில்லாமல்  உலகத்திற்காக கேட்கிறாள் ,,,,

உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சாவித்திரியின் ஒரு பக்கத்தைப் பிரியுங்கள் அதில் வரும் ஒரு சொல்

உங்களுக்கு வழிக்காட்டி பிரச்சனையைத் தீர்க்கும்

வீட்டில் வைத்து பூஜிக்க வேண்டிய ஒரு காவியம்

என் அனுபவத்தில் சொல்கிறேன்  

ஓம்  நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய  ,,

ஆனந்தமயீ  சைதன்யமயீ  சத்யமயீ பரமே

அன்புடன்  விசாலம்

Reply Reply to all Forward


ஒதுக்கப்பட்ட கிழவி

April 21, 2007

நான் பொது ஜன சேவைக்காக ஒரு சமயம் ஒரு முதியோர் இல்லம் போயிருந்தேன் ,அந்த

இடம் பணம் போதாமல் சரியாகப் பராமரிக்கப்படவில்லை .எந்தப் பக்கம் திரும்பினாலும்

அழுக்கு ,துற்நாற்றம் என்ற் இருந்தது இருப்பினும்  அந்த மிக வயதான மூத்தவர்கள்

பணம் எதிர்ப்பார்ப்பதை விட  அன்பு  பாசம் எதிர்ப்பார்க்கிறார்கள் ..நாம் அவர்களுடன் பரிவுடன் பேச அவர்கள் முகத்தில் ஒரு பிரகாசம் .ஒரு மகிழச்சி  .அதுவும் அவர்கள் பழையக்கால

நினவுகளை ஆதரவுடன் கேடக நம்முடன் மிகவும் ஆர்வமாக் பகிர்ந்துக்கொள்கிறார்கள்,அதில் ஒரு ஆச்சியைப் பார்த்தேன் அவள் பேசிய தமிழ் சற்று என்க்கு வித்தியாசமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்டேன் ,அவள் கைகளைப் பிடித்து கொண்டதில் அவளுக்கு

மிகவும் மகிழ்ச்சி அவள் பெயர்  பூவாத்தி என்றாள்,,அவள் சொன்னதை ஒரு கவிதையில்

எழுதியிருக்கிறேன் 

முவதிலே சுருக்கம் வந்திடுச்சு,

பாக்கலையா என் ராசா அத,,

என் கண்னும் மங்கிபோயிடுச்சு

பாக்கலையா என் ராசா அதை

என் கண்ணடி பவரும் போயிடுச்சு

எல்லாம் நிழலா வந்திடுச்சு

அதுவும் உனகு தெரியலயா?

எனக்கு என் கண் வேணும்டா

ஆசை மவனே ,,,

உன்ன பாக்கனும்டா மவனே

மாசம் ஒரு நாள் வந்துபுட்டு

காசு, வீசிபுட்டு போரயே

என் பேரன் யாரன்னு தெரியலையெ

உன் பொன்சாதியும்  பாக்கலையே

பால் குடிச்ச மவனே உன்னை

உசிரப்பிடிச்சு வளத்தேனே

என்ன இங்கு இசுக்குனு வந்து

தள்ளிபுட்டாய் நடப்பிண்மாக்கி

காசு வேணாம் என் ராசா மவனே

பால் ஊத்த வந்துடு அப்பா  ,,,,,,,

அன்புடன் விசாலம்

Reply Forward


ஹோலியின் கதைகள்

April 21, 2007

ஹோலி  ,,,பெயரைக் கேட்டாலே  வண்ணங்களும் பிச்காரி என்ற த்ண்ணீர் பீச்சும் குழாயக்ளும்

அன்புடன் தழுவலும்  தான் ஞாபகம் வருகிறது ம்ஹராஷ்ட்ராவில் இது மிகப் பிரமாதமாகக்

கொண்டாடுவார்கள்  அதை ரங்க பஞ்சமி என்பார்கள்,,வசந்தக்காலத்தின் நுழைவு நாள் இது   சிவராத்திரியுடன் “சிவசிவா “என்று குளிர் போய் பின் வசந்த காலம் அழகுடன்  பூக்களுடன்

அழகாக கோலமிடும் ,,இங்கு செம்படவர்கள் அதிகம் பங்கேற்று தங்களை மறந்து களிப்பார்கள்

எல்லோரும் ஒவ்வொரு  நடு சந்தியிலும்  மேலே சுமார் 6அல்ல்து ஏழுமாடி உயரத்தில்  ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம் ரூபாயகள் வசூல்  செய்து மேலே தனியாக்க் கட்டி விடுவார்கள் 

பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும்  இதை உடைக்க ஒரு “டோலி”என்ற குமபல் வரும் 

அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும் . பாட்டு பாடிக்கொண்டு  “கோவிந்தா 

ஆலா ரே  என்று கொட்டு கொட்டிக்கொண்டும் வருவதைப் பார்த்தால் நம் உடலும் சிலிர்க்கும் 

பின் ஒருவர்க்கொருவர் பிடித்துக் கொண்டு முக்கோணம் போல் மேலே ஏறி அதை எட்டிப் பிடித்து  உடைப்பார்கள் அவர்களை ஏற்விடாமல் த்ண்ணீர் அவர்கள் மேல் கொட்டுவதும் உண்டு 

இது போல் ஜன்மாஷ்டமி அன்றும் இருக்கும் ,,அவர்கள் சாமர்த்தியமாக எடுத்தால் அந்த 

ரூபாய்கள் அவர்களுக்கே ,,,,

ஜீஜா பாய்  லக்கூஜிஜாதவ் மஹராஜாவின்  பெண்,,அவள் தன் ஐந்து வயதில்  விளையாட்டாக எல்லோர் மேலேயும்  வண்ணக் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்க சிறு பையன்  “சாஹூஜி ‘

மேல் பட்டு விட  அவ்னது தந்தை  ம்லாஜி ராவ் பாவ்லே  தன் மகனுக்கும்  ஜீஜாபாயிற்கும் 

திருமணம் நிச்சியம் செய்து விட்டார்  பின் சில காலம்ம்கழீத்து திருமணம் நடை பெற 

வீர சிவாஜி பிற்ந்தார்   மஹராஷ்டாராவும்  பிறந்தது இடைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரண்மாகிறது 

ம்துரா பிருந்தாவன் ,,,இங்கு ஹோலி   ராதா கிருஷ்ண பாவத்துடன்  கொண்டாடப் படுகிறது 

ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்து கண்ணன் தன் அம்மா ய்சோதையிடம் சென்று”அம்மா

நான் மட்டும் ஏன் கருப்பு  ராதா மட்டும் ஏன் இவ்வள்வு சிவப்பு என்கிறார் ..ய்சோதைக்கு 

பதில்  சொல்லத்தெரியவில்லை அப்போது கிருஷ்ணர் ஒரு கருப்பு வர்ணம்  குழைத்து 

ராதாவின் அழ்கியமுகத்தில்  பூசி  அவளையும் கருப்பாக்கினாராம்  ,இது ராதாவின்  எண்ணம் 

ஆக இருந்ததாம் அதை அவர்  அறிந்து இந்த மாதிரி விளையாடினார் என்கிறார்கள் .

அதனால் அங்கு ஹோலி கலர் ஒருவருக்கொருவர்  முகத்தில் பூச ராஸலீலா என்ற ந்டனமும் ஆடுகிறார்கள் பிஹாரி என்ற க்விஞர் ஹிந்தியில் இது பற்றி கவிதை  எழுதி 

இருக்கிறார்  மிகவும் மட்டமாக ஹோலி களிப்பது பிஹாரில் தான்  ,தண்ணீருக்கு பதில்  சாணம்

கரைத்து ஊற்றுவார்கள் பஸ்ஸின் சன்னலினுள்  சாணி உருண்டையும் வீசி எறிவார்கள் 

நான் ஒரு தடவை “கயா “போன போது த்ப்பித்து வந்தது பெரும் புண்னியம் ஆனது  

எல்லோருக்கும் என் ஹோலி வாழ்த்துக்கள் அன்பைக் கொடுப்போம்  அனபி வளர்ப்போம் 

வள்ரும் ………..அன்புடன் விசாலம்

       

Reply

ஏம்மா இந்தத் தனி வீடு

April 21, 2007

என் தோழியின் வீட்டில் முதல் மகன் அமெரிகாவிற்கு போக இரண்டாவது மகன் வீட்டுப்

பிரச்சனையால் வேறு வீட்டிற்கு தனிக்குடித்தனம் போக  அன்று அவர்கள் வீட்டிற்கு நான்

போயிருந்தேன் அப்போது அவர்கள் வீட்டு சிறு பெண்தன் பாட்டியைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள் ,அன்று நான் வீடு வந்தவுடன்  இந்தக் கவிதைப் பிறந்தது ,,,,,,,

தாத்தா இல்லை முத்தா கொடுக்க ,

பாட்டி இல்லை கதைகள் சொல்ல ,

சித்தி இல்லை இனிய பாட்டு பாட ,

சித்தப்பா இல்லை கேரம் ஆட ,

மாமா  இல்லை என்னைத் தூக்க 

மாமியும் இல்லை என்னைத் தாங்க ,

அத்தை மடி மெத்தையும்  இல்லை 

விளையாட ஒரு குழந்தையும் இல்லை ,

அடுத்த வீட்டில் யார்? தெரியவில்லை ,,

ஒருவர்க்கொருவர் பார்க்க நேரமுமில்லை 

தனி வீட்டிற்கு ஏன் வந்தோம்  அம்மா ?

பாட்டி  வீட்டிற்கே போலாம் அம்மா? ,

அன்புடன் விசாலம்

Reply Forward

காவடிகள்

April 21, 2007

kaavadi.jpg

தைப் பூசம் என்றாலே வித விதமான காவடிகளையும் பலவிதமான உடம்பைச் சிலிர்க்க வைக்கும் பிரார்த்தனைகளையும் பார்க்கிறோம், நானும் ஒரு தடவை தில்லியில் உத்தர் ஸ்வாமி மலையில் காவடி எடுத்துள்ளேன். மேலே மலை ஏறுவதே தெரியாமல் என் தோளில் இருக்கும் பாரமும் தெரியாமல் எப்படி மேலே நடந்தேனோ எனக்கே தெரியவில்லை. இதைதான் மனச் சக்தி என்கிறார்கள் போலும். எப்படி வேண்டியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்று மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் எடுக்கும் காவடியில் சிரமம் தெரிவதில்லை.
சிலர் 108 வேல் உடம்பில் குத்திக் கொண்டு தேரில் ஒரு நூலில் குப்புறத் தொங்கிப் போவதையும் பார்த்து இருக்கிறேன் சிலர் கன்னத்தில் பெரிய அலகைக் குத்திக்கொண்டு இன்னொரு கன்னம் வழியாகத் துளை போட்டுக் கொண்டு வருவார்கள். ஒரு இரத்தமோ வடுவோ இருப்பதில்லை. நம் நாட்டிலும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா, பினாங் போன்ற இடத்திலும் இவைகள் நடக்கின்றன. ஒரு ஜப்பானியன் காவடி எடுப்பதைப் பார்த்திருகிறேன். காவடி எடுத்தவரிடம் இதைப் பற்றி கேட்டவுடன் அவர் இதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்குகிறார்.
நம் உடம்பில் எண்டோர்பின்ஸ் என்ற திரவகம் இந்த மாதிரி நேரத்தில் அதிகமாகி அது ஒரு வலி நிவாரணியாகச் செயல் படுகிறது என்கிறார். அது உண்மையா என்று விஞ்ஞானிகள் சொல்ல வேண்டும்.
இந்தக் காவடியின் தத்துவம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் என் மனதில் பட்டவைகள்இடும்பன் தூக்கிய இரு மலைகள், துக்கம் சுகம் என்ற இரண்டையும் சமமாகப் பாவித்து தோள் கொடுப்பது
இருமலை சிவ கிரி, சக்தி கிரி… சிவனும் சக்தியும் சமாமாக சமபாகமாக நம் உடம்பில் சேர பேரானந்தம்! மலை போல் அசைய முடியாத நம்பிக்கை வேண்டும். மலைப் போல் துன்பம் வரினும் அந்தத் துன்பத்திற்கு நாமே பொறுப்பேற்று அதை நிவிருத்தி செய்ய முயல வேண்டும்.
குருகொடுத்த வேலையை எத்தனை பளுவான தானாலும் நிறைவேற்ற வேண்டும். இங்கு இடும்பன் அகஸ்தியர் வேண்டுகோளின் படி இரு மலைகளையும் தன் தோளில் தராசு போல் தூக்கிச் சென்றான்.
தைப்பூசம்! முருகனுக்குச் சிறந்தநாள். வள்ளியுடன் காட்சி அளிக்கும்
நாள்.



முருகனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா!



அன்புடன்விசாலம்


திருவிளக்கே! -தமிழ் பாடல்

April 21, 2007

                                          images.jpg

அன்பு ராஜா ராஜ் இந்த குத்துவிளக்கின் தமிழ் பாடலைக் கேட்டிருந்தார். எல்லோருக்கும் உப்யோகப் படவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன் விளக்கேற்றி வைத்தப் பின் இதைச் சொல்வது உண்டு.

விளக்கே… திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே!
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே !
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க!
மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
மாங்கலயப் பிச்சை மடிப் பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா !
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லும் அம்மா!
அல்லும் பகலும் அண்டையில் நில்லும் அம்மா!

இந்தப் பாடலை ஞாபகம் செய்த பின்னர் எனக்கு ருத்ரத்துடன் வரும் சமகம் ஞாபகம் வந்தது. அதில்

“சஞ்சமே மயஸ்சமே பிரியம்சமேனு காமஸ்சமே”
என்று எல்லாம் கிடைக்கட்டும் என்ற அர்த்தத்தில்
வேதம் சொல்லுகிறது அதை பற்றி பிறகு சொல்கிறேன்
அன்புடன் விசாலம்