மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே!
வணங்கினோம் உன்னையே…
{மலர்போல் }
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,
நதி காய நேராமல் நீரூற்று தாயே
இந்நிலம் பார்த்து நீயே..!
எளியோரை மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாழ்த்தாமல் வசைக்காட்டு தாயே!
என் வளமான தாயே!
பசிதாகம் காணாமல் வயிறாக்கு தாயே…
இசைப்போர்கள் செவிதேடி இசைஊட்டு தாயே!
{மலர் போல }
புகழ் செல்வம் நலம் கல்வி குறவின்றி வாழ
புவி மீதில் இறைஞானம் எமை என்றும் நாட
ஒரு குறையாமல் வாழ
அருளோடு பொருள் வேத அறிவோடு ஞானம்,
தெளிவோடு தினம் காண நிலை வேண்டும்
வேண்டுமது அது திரளாக வேண்டும்,
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே…
உறவோடுமகிழ்வோடுஎன்னைமாற்று தாயே!
{மலர்போல}

April 17, 2007 at 3:49 pm |
இந்தப்பாட்டை தினமும் காலையில் அம்மா போடுவாங்க கேட்டுக்கிட்டே எழுந்திருப்பேன். மனதுக்கு இதமா ஆரம்பிக்கும் காலை. விஜய் டிவி யில் வரும் எங்களுக்கு இப்ப இருக்கும் ஏரியால வர்ரது இல்ல , முழுசா அந்தப்பாட்டை படிக்க முடிந்ததில் சந்தோஷம்.
April 17, 2007 at 3:58 pm |
[...] by muthulakshmi on April 17th, 2007 இந்தப்பாட்டை தினமும் காலையில் அம்மா …கேட்டுக்கிட்டே எழுந்திருப்பேன். [...]
April 17, 2007 at 4:09 pm |
இந்த பாடலை எழுதி இசையமைத்தவர்…திருவாளர்.கங்கை அமரன் அவர்கள்.
April 18, 2007 at 11:39 am |
do you have MP3 of this song?