ஆங்கில ஆதிக்கம் கீழ் ,
ஐந்நூறு ஆண்டுகள் நாம் ,
கத்தியின்றி இரத்தமின்றி ,
அஹிம்சை என்ற கொள்கைப் பற்றி,
சுதந்திரம் பெற்றோம் ,
பல தியாகங்கள் கற்றோம் ,
முழு சுதந்திரம் , நம் குடியரசு தினம் ,
கொடுத்தது மக்கள் ஆட்சிக்கு பலம் ,
சுதந்திரத்தின் முழுமை ,
மக்களின் பல உரிமை ,
எழுத்தின் மூலம் சட்டங்கள் ,
காத்து நிற்கும் வட்டங்கள் ,
வந்தது குடியரசு தினம் .
ந்மக்கெல்லாம் கொண்டாட்டம் ,
முப்படைகள் அணிவர,
அழகு சீருடை ஒரு மிடுக்கைத் தர
பாரதத் தலைவருக்கு வண்க்கம் செலுத்த ,
மனம் கொள்ளைப் போகிறது ,
தேசப் பற்று மிளிர்கிறது ,
வீரக் குழந்தைகள் பரிசைப் பெற
நாட்டு வீரர்கள் பதக்கங்கள் பெற
ப்லதரப் பட்ட காட்சி மாடல்கள்,
கூடவே முழங்கும் அழகிய பாடல்கள்
பள்ளிக் குழந்தைகளின் சிறந்த அமைப்பு ,
பல நடனங்களின் சிறந்த கருத்து ,
முடிவில் பறக்கும் விமானங்கள் ,
பிரமிக்க வைக்கும் கரணங்கள்
ஒளிவீசும் அதன் வாலகள் ,
மேலிருந்து உதிரும் பலப் பூக்கள்,
ஆஹா அழகே அழகு நம் குடியரசு தினம் ,
உரிமைக் காப்போம் என்று சொல்லும் மனம் ,,
அன்புடன் விசாலம் ,
Posted by annaiyinarul
Posted by annaiyinarul
Posted by annaiyinarul