கருணா சாகரம் சாந்தம்
அருணாசல வாசினம்
ஸ்ரீ சேஷாத்ரி குரும் வந்தே
பிரும்ம பூதி தபோநிதிம்
அன்புத் தாய் மரகதம்
பெற்றெடுத்த உத்தமனாம் ,
சேஷாத்ரி என்ற பெயரும் சூட,
ஒரு மரகதமாக்வே ஒளிர்ந்தார் ,
ஒரு தெய்வக் குழந்தை ஆனார்
ஒரு சித்தப் புருஷர் அவதரிதார்
ஒருநாள் ,,,தாயுடன் அவர் ,,,
பொம்மைக் கடைக்குச்செல்ல
பொம்மைக் கேட்டக் குழந்தை
ஒரு கிருஷ்ண பொம்மை எடுக்க
காசு வாங்க மறுத்தார் ,,கடைக்காரர்
அந்தத் தங்கக் கையைப்
பிடித்தும் கொண்டார் .
“சாதாரணக் குழந்தையில்லன் இவன்
கைப்பட்டாலே பொன்னாகும் அம்மா”
பெற்றோரின் மறைவு
மனதில் புகுந்த வைராக்கியம்,
சேஷாத்ரி உதித்தது நம் பாக்கியம்
ம்னம் போனது இறைச் சிந்தனையில் ,
நேரம் கழிந்தது சிவபூஜையில் ,
மயானத்திலும் உபாசனம் ,
சிவபெருமானின் த்ரிசனம் ,
வானத்தில் பாடிப் பறக்கும்
தேவதையும் கண்டார் ,
பார்த்ததைப் பகிர்ந்தும் கொண்டார் ,
“பைத்தியம் பிடித்தது ‘என்ற உறவினர்,
மயானம் போனால் வீடும் நுழையாதே’
என்ற உத்தரவும் பிறந்தது ,
வீட்டை விட்டார் ,
கோவிலில் அடைக்கலம் ,
கண்டார் ஒரு பொன்மேனி யோகியை
அவர் அணிந்தது தேங்காய்கப்பறை ,
நான்கு சீடர்கள் உடன் இருக்க .
தட்சிணாமூர்த்தி தரிசனம் ,
மெய்சிலிர்த்தார்
பரவசமானார் ,
கண் நிரம்பி குளமாகி கைக்கூப்பி
உடலும் விழுந்தது சாஷ்டாங்கமாக ,
அவர் நிலைக் கண்ட குரு ,
திருவாய் மலர்ந்தார்
அருளினார் நயன தீக்ஷை
வழங்கினார் ஞான உபதேசம் ,
தன் நிலை மறந்தார் ,
தன்னையு,ம் மறந்தார் ,
வந்தனர் உறவினர் ,
“தகப்பனார் சிரார்தம் “
அழைத்தனர் அதட்டலுடன் ,
மசியவில்லை சேஷாத்ரி
“நான் சன்யாசி
சன்யாசிக்கு கர்மமேது ?
வலுக்கட்டாயமாக
இழுக்கப்பட்டார்
திதி முடியும் வரை
தள்ளப் பட்டார் ஒரு அறையில்
கதவும் பூட்டப்பட்டது ,
பித்ரு கர்மா முடிந்தது
கதவும் திறந்தது
“சேஷாத்ரி…சேஷாத்ரி,,,
எங்கே போனாய்?
எங்கே போனார் ,எப்படிப் போனார்?
மாயமாய் மறைந்து விட்டாரே !
சித்த புருஷர் ஆயிற்றே
அடைத்து வைக்க முடியுமா ?
திருவண்ணாமலை ,,
சித்தர்கள் க்ஷேத்திரம்
முக்திக்கு பாத்திரம்
அங்கும் இங்கும் அலைந்தது
சேஷாத்ரி என்ற பாத்திரம்
வானமே கூரை
எங்கும் இருந்தார் ,
எதையோ சாப்பிட்டார் ,
எல்லோரையும் வண்ங்கினார்
“ஸர்வம் பிரும்ம மயம் “
எங்கும் பிரும்மத்தைக் கண்டார் ,
ஒரு ஏழு கழுதைகளை வண்ங்கி
கண்களில் ஒத்திக் கொள்ள்
சிரித்தனர் மக்கள் ,
ஒருவர் துணிச்சலுடன் கேட்டார் ,
“எனப்பா ,,,கழுதையை ஏன்
கண்களில் ஒற்றிக் கொள்கிறாய்?
“கழுதையில்லை அப்பா இது
சப்த ரிஷிகள் அல்லவா ?
அஹஸ்தியர் ஜமதக்னி ,,,,,,
என்று வரிசைப்படுத்த
மக்கள் மெய்மறந்தனர்
நடமாடும் இறைவன் ஆனார்
பேசும் தெய்வம் ஆனார்
அவதார புருஷ்ர் ஆனார்
அரும் பெரும் சித்தர் ஆனார்
அருணாசலேச்வருடன் கலந்தார்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவர் சரித்திரம் படித்தப்பின் த்போவன்ம் சென்று அவர் தரிசனம் செய்து வந்தேன்
அந்தத் தினத்திலிருந்து அவர் சரித்திரத்தை எழுத ஆவலாக இருந்தேன் ,ஒரு சிறு முயற்சி
அவ்வளவுதான் , தயவு செய்து படிக்கவும் ,,,,அன்புடன் விசாலம் .
January 26, 2009 at 10:14 am |
please check spelling mistakes