பூரி தேரோட்டம்
July 5, 2009பண்டரிபுரம்
July 3, 2009ஆடி மாதம் { ஜுலை } வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் ,காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள் ,பண்டரிபுரம் வரை பொடி நடைதான் ,நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள் சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள் அவர்கள் வாயில் ” பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ” என்றும் விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல் என்றும் விடாமல் நாமஜபம் வந்துக் கொண்டிருக்கும் அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும் இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம் லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர் சாத்தகி ,அவ்ருக்கு பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான் அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது அவன் பெயர் புண்டரீகன் .எதைப் பார்த்தாலும் அழிப்பான் துன்புறுத்துவான் நாய் மேல் கல் வீசுவான் ,முயலின் காதைத் திருகுவான் .இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான் ,அவனுக்கு திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணி புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை ,வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான் ,அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார் ,அதற்கு அவன் “அப்பா நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன் ,இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப் போகிறேன் ,,” என்று கத்தி தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான் ,அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள் பலநாடகள் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள் ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான் ,வழியில் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செறுப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்து தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள் .ஆனால் அவன் “வாயை மூடிக்கொண்டு வா அவர்கள் கிழங்கள் வந்தால் நம்க்குத்தான் கஷ்டம் ” என்றான் இரக்கமில்லாமல் ,, அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான் .அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது , அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார், பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் ஒரு முனிவர் தென்பட்டார் ,உடனே அவரிடம் போய் ” காசி ஷேத்திரம்.எங்கு உள்ளது ? என்று கேட்டான் “காசியா ?எனக்குத் தெரியாதே “,,,,,,,, “இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்? “காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும் .. நீ போகவேண்டும் என்கிறாயே ,,,” இதைக் கேட்டு கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான் இரவு நேரம் ,,,,தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று பெண்கள் நுழைந்தனர் ,மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர் ,,அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்தௌ அவர்கள் பல வேலைகள் செய்தனர் ஒருவள் வீடு கூட்டினாள் மற்றொருவள் வீடு துப்புறத் துடைத்து அழகான் கோலம் இட்டாள்.பின் அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவி துடைத்து வணங்கினாள்,பின் அவர்கள் வெளியே வந்தனர் , என்ன ஆச்சரியம் மூன்று பேர்களும் மிகவும் அழகாக லட்சணமாக சுந்தரிகளாக வந்தனர் , “இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள் .இப்போது எப்படி இது? வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான் “சுந்தரிகளே ,நீங்கள் யார்? சொல்லுங்கள் ” என்றுக் கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான் , அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறி பின் சொன்னாள். “நாங்கள் கங்கை யமனை ,ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவைச் செய்கிறோம் இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம் பாபம் எங்களிடம் சேர அவலட்சண்மாக மாறுவோம் இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம் போன ஜன்மப் புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய் ,இனியாவதும் திருந்தி பெற்ரோருக்கு சேவைச் செய்,,நீ இத்தனை நாடகள் செய்தப் பாபத்தைப் போக்கிக் கொள் உன் துர்குண்த்தை மாற்றிக் கொள் ,தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு” புண்டரீகன் எதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான் தான் செய்தத் தவறுகளுக்கு வருந்தினான் ,பின் கங்கா தேவியிடம் கேட்டான் “இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன ? ” அப்பா புண்டரீகா ,இவர் கோவில் போனதில்லை ,யாகம் செய்ததில்லை தான தருமம் செய்ததில்லை ,ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடைச் செய்து வருகிறார் அவர்களே அவரின் தெயவம் ,பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும் .பாபங்கள் கரைந்துப் போகும் ” ” தாயே நான் பெற்றோருக்கு பல அநீதிகளை இழைத்து விட்டேன் , இப்போது திருந்தி விட்டேன் இதோ இப்போதே போகிறேன் அவ்ருக்கு மனம் உவந்து சேவைச் செய்வேன் ,” திரும்பி வந்து படுத்தப்பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான் ஆசியும் பெற்றான் பின் பெற்றோரைத் தேடி கண்ணிரால் பாதங்களைக் கழுவினான் அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான் வேறு ஒரு சிந்தனையும் இல்லை , இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார் , அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார் ,”புண்டரீகா புண்டரீகா ,,,,, ” யார் ,,,,யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள் ,நான் பெற்றோரின் சேவையில் ஈடு பட்டுள்ளேன் ” என்று ஒரு செங்கலைக் கதவைத்திறந்து வீசிப் போட்டான் ,அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று இரண்டு கைகளும் இடுப்பில் வைத்துக் கொண்டார் ,, அப்படியே நின்றிருந்தார் , வெகு நேரம் கழித்து புண்டரீகன் கதவைத் திறந்தான் பார்த்தான் கண்ணனை ,,தன்னை மறந்தான் ,அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். “இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்களைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே ” புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன் ,எதாவது வரன் கேள் ” “உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி’ புண்டரீகா உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனி பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும் நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய் உன்னை எல்லோரும் “விட்டல் “என்றும் அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள் “என்றார் ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்
தலைப்பு—- “பசுபதியே நீயே கதி “
June 27, 2009உரையாடல் சமூக, கலை , இலக்கிய அமைப்பு ” நடத்தும்
ஆஸ்பதிரிக்கு அழுதேன் , ரிசல்ட் எல்லாம்
நாட்கள் கழிந்தன ,என் அண்ணனைப்போல் ஒரு நண்பன் வந்தான் ,வந்தால்
“ஹோமியோபதி “டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பரரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா அழைத்துப்போகிறேன் “
எல்லாமே நம்பிக்கைத்தான்
June 26, 2009வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி ,
பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் ,
அங்கே தேசபக்தி மணக்கும் ,
தேசியக்கொடி ஏற்றம்
நம்முன் பாரத அன்னையின் தோற்றம் ,
நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,,
அதோ தாத்தாவின் புகைப்படம்
அதன் முன் இனிப்பு சம்படம்
படையல் படைக்கும் உறவினர்கள்
ஆசிகள் வழங்கும் முன்னோர்கள்.
தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை
கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை
நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால்,,,,,
மறைந்தத் தலைவர்கள் சிலையாக ஆட்சி
பிறந்த நாட்களில் மாலைகளுடன் காட்சி
கைக்கூப்பிக் கண் மூடி நினைக்கும் மக்கள்
ஆசிகளை வேண்டி நிற்கும் தொண் டர்கள்
தலைவர்கள் பேசிய பொன்மொழிகள்,
நம்பிக்கையில் தலைவரையே கண்ட உணர்வு ,
எல்லாமே நம்பிக்கையால்,,,,,,,,,,
புகைப்படங்களில் தெய்வ உருவம் ,
கடவுளாகத் தோன்றும் அந்த ரூபம்
தீப வடிவில் தேவியின் தரிசனம்
பார்த்தால் பரவசம் ஆகும் சிலர் மனம் ,
கல்லிலும் கடவுளைக் காணும் மனிதன்
சிகரத்திலும் இறைவனை தரிசிக்கும் மனிதன்
நம்பிக்கையில் கடவுளைக் கண்ட உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,
அன்புடன் விசாலம்
தலைப்பு ….. அன்பே தெய்வம்
June 24, 2009
புத்தம் சரணம் கச்சாமி
June 24, 2009தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாக
பௌர்ணமி ஒளிப்பெற்றது விசாக பௌர்ணமி மோக்ஷநிலை அடைந்ததும் விசாக
பௌர்ணமி ,மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை
சுத்தோதனின் உத்தம புத்திரன,
அருமை மகன் , அவன் சித்தார்த்தன் ,
கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான்
உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்
ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம்
”பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் ”
அரசகுமாரன் ஆக்கும் முயற்சி
கொடுக்கப்பட்டது பல பயிற்சி
தந்தையின் அதிக பராமரிப்பு
தாயின் அதிக ஆதரிப்பு ,
கவசமான பெற்றோர்கள்
சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்
அரண்மணைக்குள் பல வித்தைகள்
விதைக்கப்பட்டன பல கலைகள்
மனம் நிறையவில்லை,
எதிலும் சுவையில்லை
மனதில் தெளிவில்லை
ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை
அவனுக்குத் தேவை ஒரு மாற்றம்
அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்
வந்தால் கிளிப்போல் ஒரு கன்னி
”யசோதரா” அவனையே எண்ணி,
ஒரு மகனையும் அளித்தாள்
ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்
ஒரு நாள்,,அந்த நாள்
யசோதராவிற்கு சோதனை நாள்
உலகத்திற்கு நல்ல நாள்
வெளி வந்தான் சித்தார்த்தன்
தேரிலே பவனி வந்தான்
தேரோட்டியும் உதவினான்
அரண்மணை வெளியே வந்தான்
வாழ்க்கையில் அதுவே திருப்புமுனை
கௌதமபுத்தர் ஆன அரிய சுனை
கண்டான் அங்கு ஒரு தொண்டு கிழவன்
கூனல் முதுகு ,
கையில் தடி
காலில் நடுக்கம்
மனம் பதைபதைத்தான்
சித்தார்த்தன்
இதுவா வாழ்க்கை ?
தொடர்ந்தபிரயாணம்
கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடல் ஆட
உள்ளம் தாக்க
கண்கள் சொருக
மரமாக சாய
ஆ இது என்ன ?
இப்ப்டியும் ஒரு பிறப்பா ?
இதுவா வாழ்க்கை ?
மேலும் தொடர்ந்தான்
வந்தது ஒரு சவம்
எங்கும் நிரம்பிய சோகம்
சிவமாய் இருந்த உடல்
இன்று ஏன் சவமானது ?
ஒரே குழப்பம் !
மனதிலே கேள்விக்குறி1
விரகித்தியடைந்த மனம்
கேட்டது ஒரு வினா
இதுவா வாழ்க்கை?
வேண்டாம் வேண்டாம்
ஆடம்பரம் வேண்டாம்
ராஜ போகம் வேண்டாம்
வேண்டும் நிம்மதி
வேண்டும் அமைதி
வேண்டும் ஒரு தேடல்
பிறப்பின் காரணம் தேடல்
படைத்தவனைத்தேடல்
மனம் தத்தளித்தது
வீடு கசந்தது
நல்லிரவு .
மனைவி யசோதராமீது ஒருபார்வை
பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை
வைராக்கியம் புகுந்தது
எல்லாம் உதறினான்
உள்ளோளி தேடினான்
திரும்பிப்பாராமல்
வேகமாய் நடைத் தொடர்ந்தது
தேடலும் தொடர்ந்தது
”கயாவில் சென்று நின்றது
தியானத்தில் நிலைத்தது
நீண்ட தியானம்
அரச மரத்தின் கீழ்
தன்னை மறந்த நிலை
திடீரென்று ஒரு ஒளி
அவர் அனுபவித்த பரமானந்தநிலை
உள்ளே ஒளி தெரிந்தது
ஞானோதயம் பிறந்தது
”கௌதமபுத்தர் ” ஆனார்
எட்டடி பாதைகள்.”பிறப்பு
புத்தமதத்தின் சிறப்பு
ஆயிரம் பிறையும் கண்டார்
”ஆசியாவின் ஒளி”யும் ஆனார்
அன்புடன் விசாலம்
வீடும் வாஸ்துவும்
June 24, 2009விதியின் வலை
June 24, 2009விதியின் வலை
வானம் இருண்டது ,
மேகம் திரண்டது ,
இடியுடன் மின்னல்
மழையுடன் புயல்,
நூல் போல் இழை
சோ என்ற மழை
ஒரு அறையில் நான் தனிமையில் ,
பிரித்த ஒரு புத்தகம் என் கையில்,
திடீரென்றுஒரு பூச்சி என் தோளில்
படபடப்பு அதன் இறக்கையில்
மழையில் நனைந்த நேரம்
அதன் உடலும் ஈரம்
என் கை அதைத் தட்டியது
சுவற்றின் மூலையில் விழுந்தது .
அதன் பக்கம் என் கவனம்
பூச்சி சாதித்தது மௌனம் .
ஒன்றிக்கவனித்தேன் அதனை
அழகு பட்டாம்பூச்சிதனை
சிருஷ்டியின் கைவண்ணம் என்ன?
அதில் கலந்த வண்ணம் தான் என்ன?
வானவில் போன்ற வண்ணங்கள்!
அதில் தீட்டியக்கோலங்கள்.
அது பறக்காதா? என்ற ஏக்கம் .
கூடவே வந்தது துக்கம்
பிரார்த்தனையும் சேர்ந்தது
திடீரென் அது பறந்தது .
ஒரே வியப்பு
ஒரே மலைப்பு
சுற்றிச்சுற்றிப் பறநதது
சுவற்றில் அது அமர்ந்தது .
நீளவிளக்கின் பின் ஒரு வலை
கண்டேன் முக்கோணத்தலை .
நம் பல்லிதான்
அதன் யமன் தான்
அதன் விதியை மாற்றினேன்
கம்பால் சுவற்றைத் தட்டினேன்
ஓடி ஒளிந்தது
பூச்சியும் பறந்தது
என் முகத்தில் வெற்றிப்புன்னகை
விதியை வென்று சூடிய வாகை
”டிக்” என்ற ஒரு ஒலி கேட்டேன்
கீழே விழுந்தப் பூச்சியும் கண்டேன்
அதன் இறக்கைகள் என் மேல்
வண்ணக்கலவைகள் என் மேல்
சுழலும் விசிறி அதன் யமனானான்
தன் கடமைச்செய்த தருமனானான்
வண்ணாத்திப்பூச்சியின் உடல்
சுவரோரம் கிடைந்தது
விதி வென்று அங்கு சிரித்தது
தலையைத் தாங்கிய மாருதி 5
June 23, 2009” உங்கள் பெண்ணின் சாதனையைப்பற்றிக் கேட்டு அவரைப்பார்க்க
மிக ஆவலாக உள்ளேன் ”என்று கூறிக்கொண்டே ராதாகிருஷ்ணகோயிலின் அதிபர்
பத்மாஜியின் வீட்டினுள்ளே நுழைந்தார்
”ஆயியே பதாரியே என்று அவரை அன்புடன் அழைத்து தன் பெண் இருக்குமிடம்
அழைத்துச்சென்றார் தந்தை ,உள்ளே பார்க்க அவர் கண்களில் நீர் பெருகியது
,பின் அவரது ஆகாரம் பற்றியும் பின் பசுவைப்பற்றியும் தந்தைத் தெரிவிக்க
கோயில் தலைவர் மிகவும்
மகிழ்ந்து ” ஆஹா என்ன பாக்கியம் நானே ஒரு பசு வாங்கிக்கட்ட நினைத்தேன்
,கிருஷ்ணன் அருகில் பசு இருந்தால் நல்லதுதானே அவனே கோபாலன் ஆயிற்றே !
அந்தக்கண்ணனே இங்கு என்னை வரவழைத்தனோ என்று தோன்றுகிறது”.
ஆமாம் என் மகளின் ராமநாமம் உங்களை இங்கு வரவழைதிருக்கிறது அந்தப்பசுவை
நீங்கள் அழைத்துச்செல்லுங்கள்
ஆனால் ரிஷிகேசத்திலிருக்கும் ஆஸ்ரமத்தின் சாது மஹராஜுக்குத்
தெரியப்படுத்த வேண்டும் என தோன்றுகிறது ,”
;” ஆம் சரிதான் நான் ஒன்று சொல்ல மறந்தேன் இந்த ராதாகிருஷ்ணக்கோயிலும்
அந்த ஆஸ்ரமத்திற்குத் சொந்தமானது தான் . நான் இதைக்கட்டினேனே தவிர அதை
இந்த ஆஸ்ரமத்திற்கு
அளித்து விட்டேன் ஏனென்றால் எனக்குப்பிறகு யார்
இதைப்பார்த்த்க்கொள்வார்கள் என்று தெரியவில்லை ;”
”எல்லாம் அந்தக்குருவின் அருள்தான் நீங்கள் பசுவைக்கன்றுடன்
அழைத்துப்போங்கள்.ரொம்ப மகிழ்ச்சி ”/
பசுவும் கோயிலுக்குப்போய் வேணுகாபாலன் அருகில் ஜம்மென்று
அமர்ந்துவிட்டது பலர் கோமாதா பூஜையும் செய்ய ஆரம்பித்தனர் .எல்லாம்
சுபமாக முடிந்தது
ஆனால் என் மகனுக்குப்பெரிய வேலைக்கிடைத்ததால் இன்னும் நல்ல சௌகரியமான
வீட்டிற்குப்போக ஆசைப்பட்டான் .அந்த
இடத்திலேயே 25 வருடங்கள் இருந்துவிட்டு எனக்கு அந்த இடத்தை
விட்டுப்போக விருப்பமேஇல்லை என் பதமாஜி அங்கு இருக்கிறாரே!
ஆனால் பிள்ளைப்பாசம் அவன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் என்று நினைத்ததால்
அவன் மாற்றிய வீட்டிற்குப் போனோம் அதுவோ ஜமுனாபார் என்ற இடத்தில்
கிழக்கு தில்லியில் இருந்தது ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக
அந்தப்பத்மாஜியிடமிருந்து தூர விலகிப்போய்விட்டேன் .மனம் சொல்லமுடியாத
வருத்தம் தான் .ஆனால் என் அக்கா மூலம் விசாரித்துக்கொண்டு இருப்பேன்
பத்மாஜியின் அண்ணாவிற்குத் திருமணம் நடந்தப்பின் இடவசதி இல்லாததால் அவர்
ரிஷிகேஷ்
போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது.
ஒருதடவை ரிஷிகேஷ் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது
அங்கு இருந்த ஒருநாளில் அவர் பெயரைச்சொல்லி விசாரித்தேன்
ஆனால் அவர் பெயரை மாற்றிக்கொண்டாரோ என்னமோ !
அவர் பெயரைச்சொன்னால் ஒருவருக்கும் தெரியவில்லை ,
ஆனால் அவர் என் நினைவில் தினமும் இருக்கிறார்.
அவரால் தான் நான் நாமஸ்மரணையின் மஹத்துவம் புரிந்துக்கொண்டேன் இந்த
நாமஸ்மரணைக்கு காலம் நேரம் இல்லை. சமையல் செய்யும் போதும் சொல்லலாம்
நடக்க்கும் போதும் சொல்லலாம் .மற்ற வேலைச்செய்யும் போதும் சொல்லலாம்.
அவரை எப்போதாவது பார்க்கும் சந்தர்ப்பம் வர
அந்த இறைவன் அருளை வேண்டுகிறேன்
அன்புடன் விசாலம்
முற்றும்
தலையைத் தாங்கிய மாருதி 4
June 23, 2009> வீட்டிற்கு வந்த பத்மாஜியின் தந்தை மனம் கலங்கி நின்றார்.
> ”இப்போது நான் அவள் முகத்தையாவது பார்க்கிறேன் பின்னால அந்தச்சாது
> மஹராஜ்சொன்னது போல் அவள் வீட்டை விட்டுப் ஆஸ்ரமத்திற்குப் போய் விட்டால்
> என்ன செய்வது ?ஆனலும் இந்த மாதிரி ஆன்மீகத்தில் மேலும் பல சாதனைகள்
> செய்து என் பெண் உயர்ந்த இடத்தைப்பிடிக்கப்போகிறாள் .அவள் எங்களுக்குப்
> பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் அல்லவோ! எல்லாம் அவன் சித்தம் ”
> இப்படி நினைத்து ஆறுதல் அடைந்தார்
>
> அந்தப்ப்சுவும் கன்றும் அவர்கள் வீட்டுப்பின் பக்க சந்தில் கட்டப்பட்டன
> .பால் கறந்துக்கொடுக்க ஒருவர் நியமிக்கப்பட்டார் ,
> ஒரு வாரம் கழிந்தது ,அவர்கள் வீட்டு மறுபக்கம் ஜமேதார்னி இருக்கும் காலனி
> ,ஜமேதார்னிகள் பல வீட்டுக்கக்கூஸை கழுவி
> சுத்தம் செய்து வருவார்கள்,அந்த இடத்தில் கசாப்புக்கடைகளும்
> இருந்தன அந்தக்காலனியின் சிறுவர்களுக்குப் படிப்பு வராமல்
> ரோட்டில் திரிந்து கோலி விளையாட்டு கில்லி டண்டா விளையாட்டு பட்டம்
> விடுதல் என்று சமயத்தைக்கழிப்பார்கள்
> அவர்கள் கண்ணில் இந்தப்பசுவும் பட்டுவிட்டது ஆரம்பித்தது சேஷ்டை
> ,,,,,,,ஒருவன் வாலை முறுக்கினான் ஒருவன் கொம்பைப்பிடித்தான் .மேலும்
> சிலர் அருகில் வராமல் கற்களை வீசினர் ,
>
> ஆனால் பல கோமாதா பிரியர்கள் அதற்கு அகத்திக்கீரை ப்ழங்கள்
> எல்லாம் கொடுத்து பூஜையும் செய்தனர் ,இந்தச்சிறுவர்கள் தொந்தரவைப் பற்றி
> புகார் கொடுத்தால் போதும் அந்தச்சாதி சனம் எல்லோரும் ஒன்று கூடி ரகளைச்
> செய்து விடுவார்கள்.
> கன்னாப்பின்னாவென்று சொற்கள் பச்சை பச்சையாக வரும் .
> தந்தை இதனால் மனம் வருந்தி தன் மகளிடம் சொல்ல அவளது
> பூஜை அறைக்குச் சென்றார்பதமாஜி தியானத்தில் இருந்தாள்.
> சிறிது நேரம் கழித்து தந்தை தொண்டையைக் கனைத்தார் ,பத்மாஜி கண்கள்
> திறந்துப்பார்த்தார் ,
> அப்பா என்ன கவலையாக இருக்கிறீர்கள்?
> தந்தை எல்லாவற்றையும் விவரித்து பசுவை எப்படிக் காப்பாற்றுவது என்று
> தெரியவில்லை என்றார் ,
> ” அப்பா கவலையை விடுங்கள்,என் ராமநாமம் அதையும் காப்பாற்றும் ”
> என்றார் பெற்றோர்களின் மனம் நிம்மதி அடைந்தது .
> அவர்கள் வீட்டு அருகில் ஒரு கிருஷணன் கோயில் ,,,,,,
> சிறு கோயிலானாலும் மிக அழகு ,ராதா புன்னகைப்புரிய கண்ணன் வேணு வாசிக்க
> அந்தச்சன்னிதானமே பவித்ரமாக விளங்கும்,அதுவும் பளிங்குச்சிலைகளாக
> வடிக்கப்பட்டிருந்ததால் அதில் ஒரு பளபளப்பும் மின்னும் ,மக்கள் அங்கு
> வந்துகண்ணனின் பாதங்களை அலம்பி துளசி மாலை பூக்கள் போட்டு பாதங்களைத்
> தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள் அங்கு அகண்ட பஜனையும் நடக்கும்
> அவர்கள் செய்யும் பஜனையில் சிரத்தை இருக்கும் பக்தி இருக்கும் சிலர்
> கண்ணனுடன் நடனம் ஆடவும் தொடங்குவார்கள் மனம் ஒன்றி விடும் நிலைதான் ,,,,
> அந்த ராதாகிருஷ்ணன் கோயிலை நடத்துபவர் பத்மாஜியைப்பற்றிக்
> கேள்விப்பட்டு அவரைப்பார்க்கவும் தீர்மானித்தார்
>
>
Posted by annaiyinarul